Showing posts with label அலம்பல்/அலசல். Show all posts
Showing posts with label அலம்பல்/அலசல். Show all posts

Friday, January 03, 2014

தேவ்யானி கோப்ரகாடே கதை

தேவ்யானி கோப்ரகாடே கதை - எ.அ.பாலா

இந்திய நியூஸ் மீடியாவும் (பொதுவாக) அரசியல்வாதிகளும் தேவ்யானியின் கைதை ஒரு தேசிய அவமானமாக உருவாக்கி, பொதுமக்களின் நாட்டுப்பற்றை வெளிக்கொணர்ந்து, ரத்தத்தை சூடாக்கி குளிர்காய்ந்த நிலையில், வெகு சிலரே பொதுப்புத்திக்கு எதிராக கருத்துகளை முன் வைத்துள்ளனர். சுவாரசியமான கோப்ரகாடே கதையில், சில புள்ளிகளைத் தொடுவோம். டிவிட்டரில் இது குறித்து ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

IMF நிறுவனத்தின் தலைவராக இருந்த (பிரதமராக வாய்ப்பிருந்த) பிரென்ச் நாட்டு ஸ்ட்ராஸ் கானை, சாதாரண ஒரு ஓட்டல் சிப்பந்தியின் சாதாரணப் புகாரின் பேரில், விமானத்திலிருந்து இறக்கி, பொது இடத்தில் விலங்கு மாட்டி கூட்டிச் சென்றதும் இதே அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது. இந்தியாவில் ஒவ்வொரு sexual harassment கேஸிலும், பல நாட்கள்/வாரங்கள் கழித்து, மீடியா கூத்துகளின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும்! எ.கா: தருண் தேஜ்பால். அமெரிக்காவில், ஒரு இல்லினாயி கவர்னர், ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜூனியர், மைக்கல் டக்லஸ் மகன் என்று பல விவிஐபிகள், நம்மூர் லெவலில் ”சின்ன” குற்றங்களுக்காக சிறையில் காலம் தள்ளுகிறார்கள். இது போன்றதை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, ஒன்றிரண்டு exceptions இருக்கும் போதிலும்! தேவ்யானி கைது நடவடிக்கையால், இங்கு சிலபலரின் ரத்தம் கொதிப்பதற்கு இது தான் முக்கியக் காரணம்.

தேவ்யானியின் Diplomatic Immunity பற்றிப் பேசும் இந்திய அரசு, பாலியல் குற்றத்துக்காக, ப்ரென்ச் தூதரக அதிகாரி பாஸ்கலை, நிர்வாணச் சோதனைக்கு உள்ளாக்கி, ஜெயிலில் போட்டது. இத்தாலியத் தூதரை வீட்டுக்காவலில் வைத்து நாட்டை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டது! அதாவது, (அந்தந்த நாட்டில்) தீவிரமாக கருதப்படும் குற்றங்களை மனதில் வைத்து Diplomatic Immunity-ஐ பார்க்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றங்கள், தொழிலாளர் ஊதிய முறைகேடுகள் சார்ந்த குற்றங்களை தீவிரமானதாக பார்க்கின்றன. அடுத்து, சி.ஐ.ஏ ஏஜெண்ட் ரேமாண்ட் டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தோலுரித்ததாக சிலர் கூறுவதையும் தமாஷாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிய சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிளட் மனி (Blood money) வழங்கப்பட்டதின் தொடர்ச்சியாகத் தான் டேவிஸ் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.

தேவ்யானி கேஸின், அமெரிக்க பப்ளிக் பிராசிக்யூட்டர் ப்ரீத் பராரா மேல் கொதித்தெழுந்து வசை பாடும் பலர், அதே ஆள் தான், மில்லியன்களைச் சுருட்டிய கள்ளப் பேர்வழிகள் ராஜரத்னத்தையும், ரஜத் குப்தாவையும் உள்ளே தள்ள காரண கர்த்தாவாக இருந்த நேர்மையாளர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல, அழுக்கு ஆதர்ஷ் கட்டடத்தில் (தகிடுதத்தம் பண்ணி வாங்கிய) ஒரு ஃப்ளாட் வைத்திருக்கும் தேவ்யானி, தனது பணியாளர் சங்கீதாவை ஏமாற்றி அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்! அதோடு, தேவ்யானி தலித் என்பதால் தான், இந்திய அரசு (இன்னும்) அதி விரைவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மாயாவதி கூறியிருப்பதை வடிவேலு காமடியாக மட்டுமே பார்க்க வேண்டும் :)

சங்கீதாவுக்கான இலவச தங்கும் இடம், விமான கட்டணம் ஆகிய செலவுகளையும் அவரது ஊதியத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும் என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சினை அது அல்ல. தெரிந்தே சட்டத்துக்கு முறைகேடாக ஒரு தூதரக அதிகாரி நடந்து கொண்டது தான் பிரச்சினை. இதற்கு முன்னும், பணியாளர் ஊதியம் தொடர்பாக 2 இந்திய தூதரக அதிகாரிகள் மீது புகார் எழுந்தும், பிரச்சினை பெரிதாகவில்லை. சங்கீதாவின் குடும்பத்துக்கு விசா, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அமெரிக்கா சென்ற பின் தான், தேவ்யானி கைது நிகழ்ந்தது என்று ஒரு குற்றச்சாட்டு! ஆமாம், திட்டம் போட்டுத் தான் அமெரிக்கர்கள் செய்துள்ளனர். ஏனெனில், இந்திய சட்டத்தையும் வளைக்க முடியும், ஓட்டைகளும் உள்ளன.


முக்கால்வாசி வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான ஒருவரே, சாட்சிக்கு வேண்டி அப்ரூவர் ஆகி விடுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இங்கு நிலவுகிறது! பணம், பதவி பலத்தினால் சங்கீதாவின் குடும்பம் இங்கே அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சாட்சி பாதுகாப்பு (Witness protection) என்பதை அமெரிக்கா தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு நாடு. தேவ்யானியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தியது 100% உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில், யாரை (விஐபிகள் தவிர்த்து!) வேண்டுமானாலும், சந்தேகத்தின் பேரில், போலீஸ் தொட்டுச் சோதனை இடுவதும், கடுமையாகப் பேசுவதும் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்! அமெரிக்க ஹிப்பக்ரஸி பற்றி பேசுவதற்கு முன் இந்திய ஹிப்பக்ரஸிகளையும் (இவற்றை அலசினால் விடிந்து விடும்!) நினைத்துப்பார்த்தல் நலம் பயக்கும்! தேவ்யானி கைதுக்கு எதிராக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை நீக்கியது போன்றவை இந்தியாவுக்கு மரியாதை தரும் விஷயங்கள் அல்ல.

தன் மேல் அமெரிக்க நடவடிக்கையை தடுக்கும் விதமாக (நினைத்துக் கொண்டு!) தேவ்யானி, இந்திய நீதிமன்றத்தில் சங்கீதாவுக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்து வைத்தார். ஆனால், கைதை எதிர்பார்க்கவில்லை! அது தான் உண்மை. தற்போதைய சூழலில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு,தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தான் பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர உதவும்.

இப்போது தேவ்யானிக்கும் முன்னால் ஷாருக் கானுக்கும் ஆதரவாக கொடி பிடித்த இந்திய அரசு, அதே அளவுக்கு அப்துல் கலாம் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு இந்திய மீனவர் துபாய் அருகில் அமெரிக்க கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இறுதியாக, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு பல ஆண்டுகளாக செய்யும் கொடுமைகளை இந்திய அரசோ, பிற இந்தியர்களோ வலிமையாக தட்டிக்கேட்டதே கிடையாது என்று தாராளமாகக் கூறலாம்! அமெரிக்கா போல இலங்கை, இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ / தொழில் கூட்டாளி நாடு இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!

Friday, April 13, 2012

IPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல்




இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற CSK-RCB ஆட்டத்தின் முதல் இன்னிங்க்ஸை வேலை காரணமாக டிவியில் பார்க்க இயலவில்லை. அதுவும் நல்லதுக்கு தான். கிரிக் இன்ஃபோ தளத்தில் RCB ஸ்கோர் எகிறிக் கொண்டிருந்தது! கெய்லை டம்மியாக்கி விட்டு ஊர் பேர் தெரியாத அகர்வால் சென்னை பந்து வீச்சை விளாசித் தள்ளினார். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 53 (5.2). அகர்வால் எடுத்தது 45, கெய்ல் 7. அஷ்வின் பந்து வீச்சு இப்படி துவைத்து எடுக்கப்பட்டு பார்த்ததில்லை. 3 ஓவர்களில் 34 ரன்கள் தாரை வார்த்திருந்தார்.

அகர்வால் சென்ற பின், கெய்லுக்கு கொல வெறி பிடித்து, ரெய்னாவின் ஒரு ஓவரில் 21 ரன்கள். 9 ஓவர்களில் 90 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு. கோலிக்கும் சீக்கிரம் வெறி பிடிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன :) ஒரு வழியாக கெய்லின் பேயாட்டம் ஓய்ந்தபோது ஸ்கோர் 162/2 (16.2). இந்த ரன் மழையிலும், பிரேவோவும் மார்க்கலும் நன்றாகவே பந்து வீசினார். பாலிங்கர் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததில் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஒரு 10-12 ரன்கள் காப்பாற்றப் பட்டதாக கொள்ளலாம். பங்களூர் மொத்த ஸ்கோர் 205.

நிச்சயம் சென்னைக்கு தோல்வி என்ற முடிவோடு (அப்ப தான் வழக்கமான நம்ம ரென்ஷன் இல்லாம பார்க்க முடியும்!) டிவி பார்க்க ஆரம்பித்தேன். நிதானமாக தொடங்கிய டுபிளஸ்ஸி ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. உருப்படாத மொ.க முரளி விஜய் மொக்கை போட்டு 11 ரன்களில் அவுட்டானதும் நல்லதுக்கு தான். அடுத்து வந்த சென்னையின் Man for all seasons, ரெய்னா (23 of 14) அவுட்டானபோது ஸ்கோர் 88 (10.3). தோல்வியை எதிர்பார்த்து, ரிலேக்ஸ்டாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தோனி 2 டவுன் களமிறங்கியது நல்ல மூவ்! தோனி 7-8 "ஹெலிகாப்டர்கள்" விட்டாலொழிய ஜெயிக்க வாய்ப்பே கிடையாது! அருமையாக ஆடி, 46 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த டுபிளஸ்ஸி 15வது ஓவரில் அவுட்டானபோது RR 14.2. முரளி தனது அற்புதமான ஸ்பெல்லில் 21 ரன்களே கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிட வேண்டியது. அந்த சூழலில், வெற்றிக்கு வாய்ப்பு 30% என்று சொல்லும்படி தான் இருந்தது.

தோனியின் “ஹெலிகாப்டர்கள்” சரியாக பறக்காததால், தேவையான ரன்ரேட் ஏறுமுகமாகவே இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவை (RR 16.66). சென்னை வெற்றி பெறும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பு இல்லாததால், ஒருத்தருக்கும் (அரங்கில் பார்வையாளர்கள், சென்னை அணி) டென்ஷன் இல்லாத மாதிரி நான் உணர்ந்தேன்! அந்த 18வது ஓவரில், சாகீரின் அனுபவம் மிளிர்ந்தது. 7-ஏ ரன்கள் கொடுத்து, ஓவரின் கடைசி பந்தில், தோனியின் கடைசி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார். இறுதி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு 10% ஆனது!

உடல் நிலை சரியில்லாத கெய்ல் ஆடுகளத்தில் இல்லை. பத்கல் ஏற்கனவே துவைக்கப்படிருந்த (2 ஓவர்கள், 35 ரன்கள்) காரணத்தால், முக்கியமான 19வது ஓவரை வீச, வெட்டோரி பகுதி நேர பந்து வீச்சாளரான கோலியை அழைத்தது, தூங்கிக் கொண்டிருந்த (மார்க்கல்) சிங்கத்தை வாலைக்கடித்து எழுப்பிய கதையானது! 2 ஓசி பவுண்டரிகள் கிட்டியிருந்தாலும்,
மார்க்கல் அடித்த மற்ற 3 சிக்ஸர்கள் மிக “சுத்தமான” விளாசல்கள்! அந்த 28-ரன் ஓவர் கோபக்கார கோலிக்கு போதி மரம் போல! ஓவரின் முடிவில், “நல்லாத் தானே போயிட்டிருந்தது” வடிவேலுவை கோலி ஞாபகப்படுத்தினார் :) இனி, அடுத்த 5 ஆட்டங்களுக்கு, பந்து வீச கோலிக்கு கை வராது என்று நினைக்கிறேன்! பேட்டிகளில் சற்று லூசுத்தனமாக உளறும் சித்தார்த்த மால்யா சித்தபிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது!

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ஒரு No Ball தவிர்த்து அந்த ஓவரை வினய் (அழுத்தத்திற்கு ஆளாகாமல்) சிறப்பாகவே வீசினார் என்பது என் கருத்து. மார்க்கல் விக்கெட் இழந்தும், முதல் 3 பந்துகளில் 12 ரன்கள்! 4வது ஒரு Dot Ball. 5வதில் ஒரு ரன் மட்டுமே! 6வது edge வாங்கி பவுண்டரிக்கு பறந்ததில், சென்னைக்கு ஐபிஎல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றி !!!! இப்படியாக ஆட்டத்தின் 37 ஓவர்களில் (பாலிங்கர் வீசிய கடைசி ஓவரையும், சென்னை பேட் செய்த கடைசி 2 ஓவர்களையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த சென்னை அணி ஓர் அசாதாரண வெற்றியைப் பெற்றது.

எ.அ.பாலா

Sunday, April 18, 2010

564. IPL Semifinal Scenario -Part 2

தமிழ் வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பொறுத்தருளவும் :-) IPL கிரிக்கெட் பற்றி எழுதும்போது, தமிழில் எழுதினாலும், ஆங்கிலம் நிறைய கலப்பதால், பெரிய வித்தியாசம் ஏதுமில்லை!

3 matches to go: CSK vs KXIP, DC vs DD, KKR vs MI

8 possible scenarios are possible and after analyzing those, the summary is as follows:

1. I will talk about CSK first! Chennai needs a "simple" win (last ball of 20th over OR by 1 ball) against KXIP to qualify for Semis irrespective of what happens in other 2 matches as CSK has a NRR that is better than all its possible competitors, RCB, DD, DC & KKR.

CSK will decide its own destiny today at Dharmasala!

2. Mumbai win will ensure 100% Semifinal berth for RCB irrespective of other 2 matches.

CSK Losing against KXIP ensures a 3rd place Semifinal spot for RCB, irrespective of other 2 matches. So, RCB & Mallya fans should support Punjab team :-)

Considering all scenarios, it is 99% likely that RCB will enter semifinals in 3rd or 4th place. So, all RCB fans can actually relax for few days, before it gets beaten in the semis anyway ;-)

3. CSK & DC losing their respective matches and KKR winning against MI (ensuring its NRR overtakes that of DC!) is the only realistic scenario where KKR goes to semis along with MI, DD & RCB.

There are other unrealistic scenarios too where KKR can go thru' (theoretically speaking!) where "Himalayan" margin of win is needed by KKR, moving from a -ve NRR (-0.46) to +ve NRR ahead of teams like RCB & DD. I am not going to waste my time discussing those (as though I am not doing now watching IPL!) ;-)

4. One of the 2 teams, DD or DC, gets thru' to Semifinals w/o any worry about NRR & results of other 2 matches, as it reaches 16 points.

MI winning & CSK losing their respective matches is good not only for RCB, but for DC and DD as well (irrespective of the DD-DC result!) to qualify for semis. So, number of enemies for CSK has increased dramatically now ;-)

5. If DC & CSK win today, it will be ensured that 3 teams from the south (Chennai, Hyderabad, Bangalore) enter semifinals and at least 1 would reach the IPL finals!

An MI win & CSK loss ensures 2 South teams (RCB and DC) reach SF and here again, 1 of them would reach Finals!

But my support would be for Mumbai if CSK does not reach Finals! (I am sure that CSK will enter Semis anyway :-)) I would like to see Mumbai win the finals, just to see the smile on the face of that great man who has led his team so admirably, though I am not a great fan of Nita Ambani ;-)

Making the "God" feel sad is not good for the country that has embraced cricket as its religion!

அன்புடன்
பாலா

Monday, April 05, 2010

நீர் மேலாண்மை -2 -கி அ அ அனானி

நீர் மேலாண்மை குறித்து முதல் பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.

காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது

(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)

அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)

எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.

இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.

இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.

தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.

பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.

கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.

பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.

நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு

கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே

என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்

"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "

என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது

கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

கட்டுரை மிக நீண்டு விட்டதால் அடுத்த பகுதியில் பார்ப்போம் :)

கி அ அ அனானி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday, April 04, 2010

559. நீர் மேலாண்மை -1 - கி அ அ அனானி

ஒரு பிரேக்குக்கு அப்றம் கி.அ.அ.அனானியிடமிருந்து மெயிலில் மேட்டர் வந்தது! ஆஹா, இப்ப நடக்கிற பார்ப்பனீயம் / சங்கம் "டமால்-டுமீல்" பத்தி தன் கருத்துகளை தான் அனுப்பியிருப்பார்னு நினைச்சு, ஆவலா மெயிலைத் திறந்தா, கி.அ.அ.அ-வும் வேஸ்ட் பார்ட்டி ஆயிட்டார்னு புரிந்தது ;-) ஏதோ (அவருக்கு துளியும் ஒவ்வாத!) அறிவுஜீவி லெவலில், நீர் மேலாண்மை (அது என்ன எழவோ :-)) பத்தி நீ.......................ளமா மேட்டர் அனுப்பியிருக்கார்!

3 இடுகைகளாத் தான் போட முடியும்னு நினைக்கிறேன். கி.அ.அ.அ-யிடமிருந்து இந்த மாதிரி சப்பை இடுகை வருவது, பரந்து விரிந்திருக்கும் அவர் வாசகர் வட்டத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம் ;-) இருந்தாலும், Considering கி.அ.அ.அ's glorious past in terms of material he has sent earlier to me for publishing in my blog, I am unable to say "No" to publish this matter, இந்த மாதிரி "அறிவுஜீவி" வேஷம் அவர் போட முனைவது சரியில்லை என்றாலும் :-) விரைவிலேயே அவர் தன்னிலை உணர்ந்து, அதற்கேற்றவாறு, "அவல்" வகை மேட்டரை எழுதி அனுப்புவார் என்று (உங்களைப் போலவே) நான் எதிர்பார்க்கிறேன்!

Over to கி அ அ அனானி.
**********************************************

நீர் மேலாண்மை - Part 1 - By கி அ அ அனானி

சில நாட்களுக்கு முன் ஹிந்து ஆங்கில நாளிதழில் பான்ஜிபாய் மதூக்கியா என்கின்ற குஜராத் விவசாயி பற்றிய கட்டுரை வாசிக்க நேர்ந்தது.அப்படி என்ன செய்து விட்டார் குஜராத்தின் மிகவும் வரண்ட மாவட்டமான ஜுனாகாத்தின் காலாவாட் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயி. அதிகமில்லை நண்பர்களே.வரண்ட ஜுனாகாத் கிணறுகளில் நீர் தளும்பச் செய்திருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஜுனாகாத் மாவட்டத்தில் பல விவசாயிகள் கடும் வரட்சி காரணமாக வாழ்வாதாரமான விவசாயத்தையே கை விடும் படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இன்றோ பெருவாரியான கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பயமின்றி விவசாயிகள் தங்களது பயிர்களை வளர்க்க முடிகிறது.பான்ஜி பாய் என்கின்ற ஒரு விவசாயி கட்டிய சிறு சிறு தடுப்பணைகள் மூலம் இந்த நிலை சாத்தியமாகி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

இது பான்ஜிபாய் மதூக்கியா, கி.அ.அ.அ இல்லை!

இந்த விவசாயி முதலில் தனது கிராமத்தில் ஓடும் சிறு ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார்.இந்தத் தடுப்பணை தண்ணீரின் எடையைத் தாங்குமாறு கீழே பல அரை வட்ட வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது (எப்படி ரயில்வே பாலங்களில் ஓடும் ரயிலின் எடையைத் தாங்கும் படி வடிவமைக்கப் பட்டிருக்குமோ அது மாதிரி.) இந்த தடுப்பணை கட்ட சாதாரணமாக கட்டப்படும் தடுப்பணையை விட குறைந்த செலவு

ஆவது மட்டுமல்லாமல் சாதாரண அணைகளை விட திடமானதாகவும் கட்ட எளிதானதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பிரத்தியேக வடிவமைப்பினால் அதிக தண்ணீர் அழுத்தத்தையும் நீரின் ஓட்டத்தையும் தடுக்கும் படியும் இருக்கிறதாம்.

இந்தத் தடுப்பணை கட்ட பான்ஜிபாய் கிராமத்தில் சும்மா கிடக்கும் கற்களை பயன்படுத்தியிருக்கிறார்,சீரான இடைவெளியுடன் கற்களை வைத்து இடை வெளியை நிரப்ப ஆற்று மணலையும், சிறு கற்களையும் சிமென்ட்டையுமே பயன் படுத்தியிருக்கிறார்.ஒரு தடுப்பணை கட்ட கூலியும் சேர்த்து மொத்த செலவே 10000 ரூபாய்க்குள்தான் என்பது வியப்பிலாழ்த்துகிறது. இந்த முதல் தடுப்பணை கட்டப்பட்ட பின் அதன் பலனைப் பாத்த கிராமத்து விவசாயிகள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் மேலும் பல தடுப்பணைகளை கட்டச் சொல்லி இவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால் மேலும் அவர் இரண்டு தடுப்பணைகளை இதே ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளார்.இது வரை பான்ஜிபாய் குஜராத்திலும் ராஜஸ்தானத்திலுமாக 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார் என்பது நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

இந்த தடுப்பணைகளைப் பற்றி சொல்லும் போது பான்ஜிபாய் "ஒரு சிறு தடுப்பணை கட்டுவதென்றால் கிட்டத்தட்ட 50000 முதல் 100000 வரை செலவாகும். ஆனால் நான் 10000 மட்டுமே செலவழித்தேன். இங்கு ஓடும் பெருவாரியான ஆறுகள் வற்றாத ஆறுகள் இல்லை என்பதால் இந்த தடுப்பணைகள் ஆற்று உபரி நீர் ஓடி விரயமாவதைத் தடுக்கிறது. மழைக்காலம் முடிந்த உடன் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆறுகளுக்கு அடுத்த படியான முக்கிய நீராதாரங்கள் கிணறுகள் தான்.

மழைக்காலம் முடிந்தால் கிணற்று நீர் மட்டமும் குறைந்து விடுகிறது. இந்தத் தடுப்பணை உபரியாக ஓடும் நீரைத் தடுப்பதுடனல்லாது கிணற்று நீர் அளவையும் உயர்த்தி விடுகிறது" என்கிறார்.

பான்ஜிபாயின் இத்தகைய தடுப்பணைகளை கட்ட அதிகம் செலவாகாது என்பதால் அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்காமல் தனி நபர்களோஅல்லது சிறு குழுக்களோ கூட எளிதாக செயல் படுத்தி விடலாம்.இந்த முறை இந்தியாவெங்கும் பயன் படுத்தப் பட்டால் கிராம சிறு விவசாயம் பெரும் நன்மையடையும் என்பதோடு மட்டுமல்லாது இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கே உதவியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பான்ஜிபாய் போன்ற அனுபவ இயற்கை விஞ்ஞானிகள் நமது கிராமப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

வற்றாத நதிகள் இல்லாத நமது தமிழகத்திலும் இது போன்ற சிறு சிறு முயற்ச்சிகளை செயல்படுத்தினாலே விவசாயத்தில் முன்னேற்றம் காணலாம் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் அந்தக் காலத்தில் செயல் படுத்தப் பட்ட நீர் மேலாண்மை மற்றும் எனது கருத்துக்கள் பற்றி அடுத்த பதிவில் :)

கி அ அ அனானி

செய்தி மற்றும் படம்: நன்றி. ஹிந்து நாளிதழ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, January 26, 2009

517. ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது ஒரு கேலிக்கூத்து!

ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி தகுதி குறைந்தவர்களுக்கு உயரிய விருதுகள் தரும்போது, ஏற்கனவே இவ்விருது பெற்றவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவர்கள் இருவரும் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

நடிப்பையே தங்களது மூச்சாகக் கொண்டு, நடிப்புக்காக 3 தேசிய விருதுகளை வாங்கிய கமல்ஹாசனும், மம்முட்டியும், மோகன்லாலும் பத்மஸ்ரீ, தத்துபித்து காமெடி பண்ணும் விவேக்கும் பத்மஸ்ரீ. என்ன ஒரு கொடுமை :-( நமது முதல்வர் தான், தன்னை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைத்ததாக விவேக்கே கூறியுள்ளார். அவருக்கு என்ன அரசியல் கட்டாயமோ, பாவம் ;-)

அசாத்திய திறமை பெற்ற, பழம்பெரும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், விவேக்கை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.

அடுத்து, ஹர்பஜன் சிங். ஒரு விளையாட்டு வீரர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இளைஞர் இவர்! ஒரு மோசமான ரோல் மாடல். அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவும் இல்லை. ஒரு வி.வி.எஸ் லக்ஷ்மண் சாதித்ததை விட இவர் என்ன சாதித்துக் கிழித்து விட்டார் ? பத்மஸ்ரீயை இதை விட கேவலப்படுத்த முடியாது.

இறுதியாக, அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற பாயிண்ட்ஸ்மேன் (pointsman) ஆக இருந்து, அரசுக்கு ஜால்ரா அடித்த ஒரே காரணத்துக்காக அனில் ககோத்கருக்கு பத்மவிபூஷன். எல்லா விசயங்களிலுமா அரசியல், ஊழல் இந்த நாட்டுல, சே !?!?

இது பத்மா விருதுகள் லிஸ்ட்

எ.அ.பாலா

Tuesday, January 20, 2009

513. ஒபாமா "கிறுக்கு" பிடித்த "மேல்தட்டு" இந்திய மீடியா

இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ள ஒபாமா பதவி ஏற்பு விழாவை இந்தியாவில உள்ள பல செய்திச் சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன். டிவி சேனல்களை ஸ்கேன் செய்து பார்த்ததில், சன் மியூசிக், SS மியூசிக் தவிர முக்கால்வாசி சேனல்களில் ஓபாமா புராணம் தான் ஓடுகிறது :) ஒபாமா இந்தியப் பிரதமர் ஆனாரா, அமெரிக்க ஜனாதிபதி ஆனாரா என்று சந்தேகமாக உள்ளது! ரொம்ப முடியல, அதனால் தான் டிவியை அணைச்சிட்டு இந்த பதிவெழுத உட்கார்ந்தேன்!

சரி ஒளிபரப்பட்டும், தவறொன்றும் இல்லை, அதுக்காக, இந்தியா ஏதோ அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கின ஒரு ராக்கெட் மூலம் ஒரு வெட்டு விளிம்பு (cutting edge) தொழில்நுட்ப செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன் செய்யப்படும் count down க்கு இணையான ஒன்றைச் செய்து, நமது இந்திய டிவி மீடியா அடித்த கூத்து தாங்க முடியாத ஒன்றாக இருந்தது!

அமெரிக்கர்களும், அங்குள்ள மீடியாவும், ஒபாமாவைக் கொண்டாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதாக வைத்துக் கொள்ளலாம், ஒரு தேர்தல் மூலமாக.

இந்தியாவைப் பொருத்த அளவில், ஒபாமா இன்னொரு அமெரிக்க அதிபர், அவ்வளவு தான். அவரால், இந்தியாவுக்கு எந்தவிதமான பயனும் இல்லை, உதவியும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், ஆப்பு உண்டு என்று தெரிகிறது. ஏனெனில், அவரது outsourcing க்கு எதிரான நிலைப்பாடு நாம் அறிந்த ஒன்றே.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்க ஒரு தலித் ஜனாதிபதியா / உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா ஆனபோது கூட நம்ம மீடியால பெரிசா எழுதல, இப்ப ஏன் இப்டி ஒபாமா பைத்தியம் பிடிச்சு அலையறாங்க என்பது தான் முக்கியமான கேள்வி. அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்க முடியாது தான். ஆனால், ஜனநாயகத்தில் ஒரு உயர்ந்த பதவிக்கு வருவதற்கு, ஒப்பீடு செய்யப்படும் இருவருமே சந்தித்த எதிர்ப்புகள், உழைத்த உழைப்பு, செய்த தியாகங்கள் என்று பார்த்தால், பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது என்கிறேன்!

அது போலவே, ஒரு பெண், ஒரு தலித் என்ற வகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராக மாயாவதி தேர்தலில் வெற்றி பெற்று வந்தபோது, மீடியாவில் இப்போது காணப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு 10% கூட இல்லை என்பது உண்மை. இந்தியச் சூழலில், ஒரு தலித்தாக இருந்து கொண்டு, அனைவரையும் அரவணைத்து மாயாவதி பெற்ற வெற்றி மகத்தானது, அவர் சற்று சர்வாதிகாரத்தனமாக சில விசயங்கள் செய்தாலும் கூட!

பொதுவாக, மேல்தட்டு மனப்பான்மை மிக்க இந்தியச் சூழலில் மீடியாவும், அறிவுஜீவிகளும் ஒபாமா புராணம் பாடுவது அதீதமாக / போலியாக, ஏன் சற்று ஆபாசமாகக் கூடத் தெரிகிறது!!! இங்கு மேல்தட்டு எனும்போது உயர்சாதிகள் / ஓபிசியில் உள்ள சிலபல சாதிகள் என்று ஆதிக்க சாதிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்! இப்படிப்பட்ட சூழலில், ஒரு தலித் அரசியலில் / சமூகத்தில் முன்னுக்கு வந்து வெற்றி பெறுவது தான் இந்தியர்களான நாம் கொண்டாட வேண்டிய ஒன்று. இந்த சமயத்தில் சரத் என்ற IIM ல் படித்த மாணவரைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

எ.அ.பாலா

Tuesday, December 30, 2008

496. 'ஸ்பெக்ட்ரம்' ஓர் உலக மகா சுருட்டல் விவகாரமா?

ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) உரிமங்கள் வழங்கிய விவகாரம் MOTHER OF ALL SCANDALS என்று சொல்லுமளவுக்கு, போஃபோர்ஸையும் மிஞ்சும் வண்ணம் உள்ளது

சமீபத்தில் ராஜ்யசபாவில், 2G ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டது தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்பியது.  இப்பிரச்சினை குறித்து ஒரு கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி கட்சி உறுப்பினர் முன் வைத்துள்ளனர்.  சமாஜ்வாடி கட்சியின் அமர்சிங் ஸ்பெக்ட்ரம் குளறுபடி பற்றி ஏற்கனவே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். 

எதிர்பார்த்தது போல, திமுக உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு "பலத்த" எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.  அதிமுகவின் மைத்ரேயன் கூறியபடி அரசுக்கு 100000 கோடி வருமான இழப்பு என்பது அதீதமாக இருந்தாலும், அரசுக்கு கிட்டத்தட்ட 60000 கோடி இழப்பு என்ற கணக்கீடு சரியான ஒன்றே.  மைத்ரேயன் திமுக அரசின் தலையில் ஆணி அடிக்கும் விதமாக, "இந்தத் தொகையை வைத்து, இப்போது ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் அரிசியை, அடுத்த 140 ஆண்டுகள் இலவசமாகவே வழங்க முடியும்" என்று ஒரே போடாக போட்டார் :) [இந்தத் தொகையில் 15 ராமர் சேது கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது கூடுதல் தகவல்]

அமைச்சர் ராஜா தான், தனக்கு முன்னால் இருந்த அமைச்சரின் வழிமுறைகளிலிருந்து மாறுதலாக எதுவும் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், ஏனெனில் முன்னர் இருந்தவரும் திமுக அமைச்சரே என்றும் மைத்ரேயன் பேசினார். 

அதோடு, மத்திய கண்காணிப்புக் கமிஷன் (Central Vigilance commission) ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புயுள்ளதையும், இந்தப் பிரச்சினை குறித்தான பொது நல வழக்கு ஒன்றை தில்லி உயர் நீதிமன்றம் அனுமதித்திருப்பதையும் மைத்ரேயன் சுட்டிக் காட்டினார்! ஜனதா தளம் (U) வைச் சார்ந்த சரத் யாதவும் ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு முழுமையான பாராளுமன்ற விவாதம் மிக அவசியம் என்று கூறினார்.

மொத்த அலைக்கற்றைக்கு ஸ்வான் அரசுக்கு கொடுத்தது 1537 கோடி, அதில் 45%-ஐ எடிசலாட்டுக்கு விற்ற கணக்குப்படி பார்த்தால், ஸ்வான் பெற்ற அலைக்கற்றையின் நிகர மதிப்பு 10000 கோடி, அதாவது ஆறரை மடங்கு லாபத்தில் ஸ்வான் விற்றுள்ளது, மக்கள் பணம் தனியாருக்கு இப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது

இதில் ஊழல் நடந்துள்ளதோ இல்லையோ, அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு அமைச்சகம், இந்த விசயத்தில் சரியாக ஆய்ந்து முடிவுகள் எடுக்கவில்லை என்பது தெளிவு. மேலும், வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்து விடலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

தொலைத் தொடர்புடன் தொடர்பில்லாத, அனுபவமில்லாத (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சைக்கு ஒரு முக்கியக் காரணம்.  தொலைத் தொடர்பு கம்பெனிகளின் கார்டலை (cartel) உடைக்க இது உதவும் என்று அமைச்சர் இதற்குக் காரணம் கூறியிருப்பதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வது நம் உடம்புக்கு நல்லது, இல்லையெனில் பிளட் பிரஷர் எகிறி விடும் ;-)

மேலும், பிரதமர் இப்பிரச்சினை குறித்து தொலைத் தொடர்பு அமைச்சகதுக்கு எழுதியிருப்பதாக கூறப்படும் கடிதம் பற்றியும் குழப்பம் நிலவுகிறது.  அக்கடிதம் வெளியிடப்படவேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது!

முதல்வர், ராஜா ஒரு தலித் என்பதால், இப்பிரச்சினையை வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள் என்கிறார்!  இப்படி சாதியை இதில் நுழைப்பது சரியா?  ஒரு மத்திய அமைச்சரின் நடவடிக்கை, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும் (அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற சூழலில்) ஜனநாயகத்தில் கேள்விக்குட்பட்டதே!  மேலும், ராஜா தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத ஏழ்மைச் சூழலில் இருக்கிறாரா என்ன ? இது ஒரு புறமிருக்கட்டும்.  உண்மையான நிலவரத்தையும், சில தகவல்களையும் பார்ப்போம்.

100000 கோடி என்பது, இந்தியாவின் தேசிய வருமானத்தில் நாற்பதில் ஒரு பங்கு, இது பட்ஜெட் நிதிப்பற்றாக்குறையில் (financila deficit) நான்கில் மூன்று பங்கு.  அலைக்கற்றையின் உரிமங்கள்  பெற்ற 3 இந்திய நிறுவனங்கள் (ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், டாடா டெலிசர்வீஸஸ்) தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்றபோது தான், அரசுக்கு ஏற்பட்ட பெரும் வருமான இழப்பு தெரிய வந்தது.  அதாவது, வாங்கியதை விட கிட்டத்தட்ட ஆறுமடங்கு விலைக்கு விற்றிருக்கிறார்கள்!

மேலே குறிப்பிடப்பட்ட மூன்றில் முதல் 2 கம்பெனிகளுக்கும், இந்த அலைக்கற்றை உரிமம் தவிர்த்து, சொல்லிக் கொள்ளும்படியாக சொத்து (assets) எதுவும் இல்லாத நிலையில், 1651 கோடிக்கு விற்கப்பட்ட ஒவ்வொரு உரிமத்தின் மார்க்கெட் விலை 10000 கோடிக்கும் மேல் என்பது தான் நிஜம்.

இது இப்படியிருக்க, நிதியமைச்சகமே, அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை (தனது உள்தொடர்பு குறிப்பொன்றில்) ஒப்புக் கொண்டுள்ளது! அதாவது, அக்குறிப்பு, இழப்பு 22466 கோடி என்கிறது. இல்லை, மூன்று மடங்கு நஷ்டம் என்று சந்தைச் சூழலை வைத்து வல்லுனர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, 22000 கோடி என்பதே பெரும் வருமான இழப்பு தானே!  அது போல, பாரதி, வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அலைக்கற்றையிலும், அரசுக்கு சுமார் 20000 கோடி வருமான இழப்பே.  இது குறித்து அமர்சிங் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் இப்போது வெளிவந்துள்ளன, அமர்சிங் ரிலயன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சார்பாகவே இதைச் செய்திருந்தாலும் :-)

அது போல, டெலிகாம் உரிமங்கள் ஒரு போதும் இந்தியாவில் ஏலம் முறையில் விற்கப்பட்டதில்லை என்பது தவறான தகவல்!  நான் மேலே குறிப்பிட்ட 1651 கோடி என்பது, 2001-ல் நடந்த ஏலத்தின் வாயிலாகவே நிர்ணயிக்கப்பட்டது.  7 வருடங்கள் கழித்து அதே விலைக்கு அரசு விற்பது சரியா/முறையா (அதுவும் FIRST COME FIRST SERVE அடிப்படையில், அடிதடி சூழலில்) என்பது முக்கியமான கேள்வி! 

பிஜேபி ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட (1999 ஆண்டுக்கான)  நேஷனல் டெலிகாம் பாலிசியில் (NTP99) குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படியும் (guidelines), TRAIயின் பரிந்துரைகளின்படியும் தான் என்று அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.  NTP99-யிலோ TRAI வெளியிட்ட பரிந்துரைக் குறிப்புகளிலோ, உரிமங்கள் வழங்க FCFS (First Come First Serve) பாலிஸி செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படவில்லை!  பொது ஏலத்தை விட FCFS சிறந்தது என்பதை TRAI அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகபட்சம் இல்லையா? :-)

மேலும், உரிமங்கள் பெறுவதற்கான (பூர்த்தி செய்யப்பட்ட) மனுக்களை அமைச்சக அலுவலகத்தில் அளிப்பதற்கு 72 மணி நேரக் கெடுவே தரப்பட்டது என்பதும் குறிப்பிடவேண்டியது.  உரிமங்கள் வழங்கிய தினத்தில், சன்சார் பவனில் நடந்த கேலிக்கூத்தையும், அடிதடியையும் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இப்படி வந்திருந்தது!

On January 10, at 2.45 pm, the DoT posted an announcement on its website saying letters of intent would be issued between 3.30 pm and 4.30 pm and that application fees (worth over a thousand crore rupees in many cases) would have to be paid immediately by demand draft with supporting documentation. Licences with spectrum were given to those who deposited their fees first by even a fraction of a second. In the mad melee, well-heeled CEOs were manhandled by hired bouncers and DoT staffers were bashed up before the cops turned up, late as usual.

அன்று நடந்த பெருங்குழப்பத்தை இந்து நாளிதழ் விவரிப்பதையும் பாருங்கள்:

On Thursday it was total pandemonium at Sanchar Bhawan, the office of the Department of Telecom, as representatives of wannabe telecom companies literally got into fist fights and blows in a bid to be the first to get the letter of intent.

After keeping nearly 46 applicants on tenterhooks for almost three months, when DoT on Thursday announced that letters of intent (LIs) will be issued at 3.30 p.m., all hell broke loose as the companies made a beeline to the second floor of Sanchar Bhawan where the letter was being issued.

The clamour was so shrill that a representative of one of the applicants got a hired goon to ensure that it was his company which was the first to enter the gates.  What followed could make Bollywood stunts look pale in comparison as some of the company representatives were physically thrown out of the line by rival applicant company.

இது தான், அரசுக்கு உரிமையான அரிதான/விலைமதிப்பு மிக்க ஒரு வளத்துக்கு உரிமங்கள் வழங்கும் முறையா?  மற்றொரு விஷயம், TRAI தலைவரே இந்த விவகாரத்தில் டெலிகாம் அமைச்சகத்துக்கு எதிராக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்புக் கமிஷனும் (Central Vigilance commission), CAG -வும் (Comptroller & Auditor General of India) முதல்கட்ட விசாரணை செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது.  நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்படுகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.  கடைசியாக வந்த செய்திகளின்படி, 3G ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏலம் முறையில் வழங்கப்பட உள்ளன என்பது தெரிகிறது !!! ஏன் 2G அலைக்கற்றை உரிமங்கள் வழங்கியபோது இந்த ஞானோதயம் வரவில்லை என்பது நியாயமான கேள்வி தானே ???

அப்படியும், சில "நல்லவர்களும்", சில "அப்பாவிகளும்", சில "அறிவுசீவிகளும்" ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று கதறிக் கொண்டிருப்பது காமெடியாக உள்ளது! 
 
என் எரிச்சல் எல்லாம், அரசு இழந்த இந்த வருமானத்தின் ஒரு பகுதியாவது (எப்போதும் போல, ஊழலுக்கு தண்டம் அழுதபின்) ஏழைகளுக்கான நலத் திட்டங்கள் ஒன்றிரண்டுக்காவது பயன்பட்டிருக்குமே என்பது தான்.  அரசுக்கு (பெருமளவில்)வருமான இழப்பு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில், சிறிது ஊழலைக் கூட ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது :-(
--
எ.அ.பாலா

Sunday, November 02, 2008

463. நகைச்சுவை வித்தகர் சோ - காபி வித் அனு

நேற்றிரவு விஜய் டிவி ஒளிபரப்பிய 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் சோ அவர்களும், மௌலி அவர்களும் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார்கள். எதிர்பார்த்தது போல, டோ ண்டு சார் இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நீண்ட பதிவு போட்டு தனது 'சோ அபிமானத்தை' மற்றொரு முறை நிரூபித்து விட்டார் ;-) எனவே நான் ஒரு மினி அலசலோடு நிறுத்திக் கொள்கிறேன்!

சோ அவர்களுக்கு satirical / subtle வகை நகைச்சுவை இயல்பாக அமைந்துள்ள ஒரு சங்கதி. அதனால், பார்ப்பவரை அவரால் எளிதில் கட்டிப்போட்டு விட முடிகிறது, அவரைப் பிடிக்காதவர்களைக் கூட :) அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:

1. யாரோ ஒருவர் சோவை, அவர் வாக்கிங் போகிறாரா என்றதற்கு, அவருக்கே உரித்தான பாணியில், "இல்லை டாக்கிங் மட்டும் தான் போய்க் கொண்டிருக்கிறது" என்றாராம்!

2. அவரது நண்பர் ரங்கா என்பவர் அவரை வற்புறுத்தி ஒரு முறை காலை வாக்கிங்குக்கு அழைத்துச் சென்றாராம். கொஞ்சம் நடந்தவுடனேயே, சோவுக்கு போரடித்து விட்டது. அச்சமயம், அவ்வழியில் நாய் ஒன்று (அவர்களுக்கு முன்னால்) கொஞ்ச தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பி வந்ததை சோ ரங்காவிடம் காண்பித்து, "ரங்கா, இந்த நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!" என்று சொல்ல அப்செட் ஆன ரங்கா மறந்து கூட சோவை வாக்கிங்குக்கு அழைப்பதில்லையாம் ...

3. அது போலவே, ஒழுங்காக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடம் சோ அவர்கள், நல்ல உடற்கட்டு கொண்டவர்கள் ஒரு போது சாதனையாளர்களாக இருந்ததில்லை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதோடு, 'ஒரு மனிதனுக்கு ஒன்று கட்டான உடலமைப்பு இருக்க முடியும் அல்லது அறிவாற்றல் இருக்க முடியும், இரண்டும் சேர்ந்து அமைய வாய்ப்பே கிடையாது' என்று சோ நண்பரை மேலும் குழப்பி விட நண்பர் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டாராம் :)

4. நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை ஒன்றுக்கு முன்னால் அனு, சோ மற்றும் மௌலியிடம், "நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற டாபிக்ல பேசணும், இப்ப ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்" என்றவுடன் சோ, "நீங்க சொல்ற டாபிக்ல பேசணும், நீங்க சொல்றபோது பிரேக், எல்லாம் ஒரே பொம்பளை ராஜ்ஜியமா இருக்கு!" என்று அனுவை ஒரு போடு போட்டது அருமை :)

5. சோ மௌலியையும் விட்டு வைக்கவில்லை! மௌலி தான் நாடகம் எழுத வந்ததற்கு சோ தான் இன்ஸ்லிரேஷன் என்றும், சோவைப் பார்த்து தான் தனக்கு தன்னம்பிக்கை வந்தது என்றும் கூறியபோது இடைமறித்த சோ, 'இவனே (சோ) நாடகம் போடும்போது தன்னால் முடியாதா என்ன என்பதைத் தான் மௌலி மிகவும் பாலிஷாகக் கூறுவதாக' மௌலியை வாரியது ரசிக்கத் தக்கது!

6. அது போலவே, சோ கடந்த 25 வருடங்களாக 'அதே மாதிரி' இருப்பதை மௌலி ஒரு பாராட்டாகக் கூற, சோ அனுவிடம், "கடந்த 25 வருடங்களாக என்னிடம் எந்த improvement-ம் இல்லை என்பதை மௌலி எத்தனை நாசூக்காகச் சொல்கிறார், பாருங்கள்" என்று கூறி ஒரு ஸிக்ஸர் அடித்தார் :)

7. மௌலி, விசு, கே.பி ஆகிய மூவரும் நாடக உலகிலிருந்து சினிமாவுக்குச் சென்று, வெகு விரைவாகவும் எளிதாகவும் அதன் நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டதையும், தான் அவர்கள் போல வெற்றி பெற இயலவில்லை என்றும் நினைவு கூர்ந்தார்.

8. திருப்பி வைக்கப்பட்ட (பிரபலங்களின்) புகைப்படங்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பற்றி (கா.வி.அ) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர் பேச வேண்டிய பகுதி உள்ளது. சோ முதலில் ஜெய்சங்கரின் போட்டோவை எடுத்தார். தனது சிறந்த நண்பர், பரோபகாரி, பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர், An actor by his own right என்றும் ஜெய்யை மிகவும் சிலாகித்துப் பேசினார்.

அடுத்து சோ எடுத்தது, ஜெயலலிதாவின் போட்டோவை! எடுத்தவுடன், "நமக்குன்னு வருது பாருங்க!" என்று தமாஷ் பண்ணிவிட்டு, தான் அவரை பலமுறை விமர்சித்திருப்பதை சுட்டிக் காட்டி விட்டு, இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகளிலேயே திறமையானவர் ஜெயலலிதா என்றும், ஜெவின் courage, confidence, knowledge, administrative abilities ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் அரசியலில் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும் என்றார் !

அடுத்து ஆச்சி மனோரமாவை மிகவும் பாராட்டிப் பேசினார். மனோரமா அன்றிலிருந்து இன்று வரை திரையுலகில் பிரகாசிப்பதைச் சுட்டிக் காட்டி, நடிப்புக்கு ஆண்களில் சிவாஜி என்றால், பெண்களில் மனோரமாவாகத் தான் இருக்க முடியும் என்றார் சோ. நாகேஷின் திறமையையும் மனம் திறந்து பாராட்டினார். அது போல, டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பிறகு, சாதாரண தோற்றமுடைய ஒருவர், காமெடி ஹீரோவாக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் பாண்டியராஜனே என்று அவரையும் பாராட்டினார்.

9. கலைஞர் பற்றிக் கேட்டபோது, மிகச் சாதாரண நிலைமையிலிருந்து இத்தனை உயரத்தை அவர் அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், சாமர்த்தியமும் காரணங்கள் என்றார். அது போல, ரஜினி பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும், ஒவ்வொரு விஷயம் பற்றியும் ரஜினிக்கென்று ஒரு தெளிவான கருத்துள்ளதாகவும் சோ குறிப்பிட்டது சற்று ஆச்சரியத்தை வரவழைத்தது ! "ரஜினி வேண்டுமா, கமல் வேண்டுமா?" என்ற கேள்விக்கு, தான் யாருக்கும் வெறிபிடித்த ரசிகன் இல்லை என்பதால் தனக்கு இருவருமே வேண்டும் என்று அரசியல்வாதி ஸ்டைலில் சோ எஸ்கேப் :)

10. நிகழ்ச்சிக்கு சோ தந்த Finishing Touch மறக்க முடியாதது ! அனு சோவிடம், "இந்த நிகழ்ச்சியின் காபி அவார்டை யாருக்கு, எதற்காகக் கொடுப்பீர்கள்?" என்று வினவியதற்கு சோ, எதையும் குடும்பத்தினருக்கே தர வேண்டும் என்ற தற்போதைய தமிழக நடைமுறையின்படி தான் நடக்க விரும்புவதால், அந்த அவார்டை தனது பேத்திக்கே அளிக்க விருப்பமென்றும், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்பதும் அதற்குக் காரணம் என்றும் சொல்லி, ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரி மேல் ஸிக்ஸர் அடித்தபோது, அனுவும் மௌலியும் சிரிப்பை அடக்க சற்று சிரமப்பட்டதென்னவோ நிஜம் :)

சோ அத்தோடு விட்டாரா! தன் 9 வயது பேத்தி நன்றாக 'கவிதை' எழுதுகிறாள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறாள் என்று கங்குலி ஸ்டைலில் டைமிங்காக ஒரு ஷாட் அடித்தது சூப்பர் !

இது போல ஒரு 'காபி வித் அனு' நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. Yesterday, it was a real one man show !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, July 14, 2008

448. ரங்கராஜன் நம்பி - My 2 cents!

எனது முந்தைய பதிவில் அம்முவின் விமர்சனத்தின் தொடர்ச்சியாக, எனது சின்ன மகளிடம் (6 வயது), 'படம் பிடித்ததா?' என்று கேட்டேன். அவள், "படத்தில 2 கமல் தானே ... சயிண்டிஸ்ட் கமல், கோயில்ல சண்டை போடற கமல் .. வராங்க, மீதி கமல் எல்லாம் எங்கே போனாங்க?" என்று ஒரு சூப்பர் கேள்வி கேட்டாள் :) நான் மற்ற 8 வேடங்களில் கமல் வருவது பற்றி விவரித்தபோது, "மத்த கமல் எல்லாம் பார்க்க ஏம்பா கார்ட்டூன் மாதிரி இருக்காங்க?" என்று இன்னொரு கேள்வி கேட்கவே, நான் அப்பீட் :)

My 2 cents: இணையத்தில் பலவகையான விமர்சனங்களை வாசித்து விட்டதால், உலகத்தரமான படத்தை எல்லாம் எதிர்பார்த்துச் செல்லவில்லை என்ற டிஸ்கியோடு தொடங்குகிறேன்! தசா ஒரு நல்ல மசாலா படம் என்று நிச்சயம் கூறமுடியும். Real Good Entertainer ! "சிவாஜி" பெட்டரா, "தசா" பெட்டரா என்று (ரஜினி ரசிகனான) என்னிடம் கேட்டால், என் பதில் ... No comments;) இதே படம், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலப் படமாக இருந்திருந்தால், அதன் concept மற்றும் 10 வேடங்களுக்கு சிலாகிக்கப்பட்டிருக்கும், நமது அடிமை மெண்டாலிட்டி அப்படிப்பட்டது :(

பிரம்மாண்டத்தை பிரம்மாண்டத்துடன் ஒப்பிட வேண்டும்! அந்த வகையில் சங்கரின் பல குப்பைகளை (சிவாஜி, இந்தியன் தவிர!) விட, தசா பரவாயில்லை என்று தான் கூறுவேன். இப்படி ஒப்பிடுவதை விடுத்து, சுப்ரமணியபுரத்துடனும், பருத்தி வீரனுடனும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது! கமலின் சிறந்த நடிப்பைப் பார்க்க பலப்பல உத்தமமான படங்கள் (ராஜபார்வை, மூன்றாம் பிறை, நாயகன், ஹேராம், தேவர் மகன், குணா, குருதிப்புனல், மகாநதி, தெனாலி, அன்பே சிவம் ...) நமக்காக காத்திருக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு இவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்குள் செல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை!

கமலின் நடிப்பு, குறிப்பாக பல்ராம் மற்றும் வின்செண்ட் வேடங்களில் சூப்பர். வின்செண்ட் பாத்திரப் படைப்பில் ஒரு எழவு (நுண்)அரசியலும் இருப்பதாகத் தோன்றவில்லை! பத்து வேடங்களும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, மேக்கப் சற்று அத்து மீறியதில், ஒரு வித 'ஒட்ட வைத்த' செயற்கைத்தனம் இருந்தது உண்மை தான் என்றாலும், பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு வழக்கை அனுசரிப்பதில் கமலுக்கு இணை யாரும் கிடையாது. ஒன்றுமே இல்லாத புஷ் வேடத்தில் கூட , புஷ்ஷின் சின்னச்சின்ன மேனரிஸங்களை வெளிக் கொணர்ந்ததில், கமலின் நுண்ணிய கவனமும், உழைப்பும் தெரிகிறது.

ஒப்பனையும், தொழில்நுட்பமும் வளராத காலகட்டத்தில், தனது நடிப்பால் மட்டுமே 9 வேடங்களிலும் வித்தியாசம் காட்டிய 'நவராத்திரி' சிவாஜி, ஞாபகத்திற்கு வந்தது என்னவோ உண்மை தான்! அது போலவே, கமல் தானே பத்து வேடங்களிலும் நடிக்காமல், சிலவற்றை தாரை வார்த்துக் கொடுத்திருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

தசாவின் 12-ஆம் நூற்றாண்டுக் காட்சிகளின் பிரம்மாண்டம், ஆங்கிலப்படங்களுக்கு இணையானது. கமல் நாத்திகராக இருந்தாலும், தசாவின் பத்து வேடங்களில் ரங்கராஜன் நம்பி என்ற ஆத்திக வைணவர் வேடம் தான் அவருக்கு சிறப்பாகப் பொருந்துகிறது :) சாரு தனது விமர்சனத்தில், கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால், அக்காட்சிகளை ரசிக்க முடியும்! பக்தி உணர்வு உள்ளவர்களுக்கு சிலிர்ப்பு தரும் காட்சிகள் அவை. கமல் "சாந்தாகாரம், புஜகசயனம் ..." என்று சொல்லும்போது எனக்கு மெய் சிலிர்த்தது!

வைணவத்தில், பரந்தாமனின் அடியாரைப் பணிவது, பரமனைப் பணிவதைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது! அந்த சிறிய விஷயத்தைக் கூட கவனத்தில் கொண்டு, ரங்கராஜ நம்பியை மூலவர் சிலையுடன் கட்டி கடலுக்கு இட்டுச் செல்லும்போது, பல்லாண்டு பாடும் வைணவர்கள், ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி, (மூலவரின் திருவடியைப் பற்றி வணங்காமல்!) ரங்கராஜன் நம்பியின் திருவடியைப் பற்றி வணங்குவதை காட்சியில் கொணர்ந்திருக்கும் செயல் வியப்பை வரவழைத்தது!

அதே சமயம், கேயாஸ் தியரி, பட்டர்ஃபிளை எஃபெக்ட் பற்றியெல்லாம சிந்திக்கக் கூட தமிழ் சினிமாவில் ஆள் இருக்கிறாரே என்று சாரு போலவெல்லாம என்னால் சிலாகிக்க முடியவில்லை;-)

தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை! கமர்ஷியலாக வெற்றி அடையும் திரைப்படங்களில் எந்த வகையிலும் நடிப்புக்கு scope-ஏ கிடையாது என்று மறுத்துப் பேசுவது சரியாகாது.

தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது :)

எ.அ.பாலா

Sunday, December 09, 2007

Star25a. மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் --- பாலா SPECIAL *மீள்பதிவு*

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

இப்படித் தான் வைரமுத்து, மெட்டி ஒலியை 'மெகா' பாரதம் என்று மெட்டி ஒலியின் முடிவு விழா உரையில் வர்ணித்தார் ! அதற்கு, எப்படி இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் பல அழகான கிளைக்கதைகளின் தொகுப்போ, அவ்வாறே மெட்டிஒலியும் என்று ஒப்பிட்டுக் கூறினார். மெட்டிஒலி ஏறக்குறைய 811 episodes (அதாவது, 162 வாரங்கள் !) கொண்ட ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் நான் ஒரு 150 episodes தான் பார்த்திருப்பேன் ! இருந்தும் எனக்கு கதையை புரிந்து கொள்வதில் ஒருபோதும் பிரச்சினை இருந்ததில்லை !!!!!

மெட்டிஒலி பலரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆனது. தொடரின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மக்கள் பிரச்சினைகள் ஆயின ! இத்தொடரின் பத்து எபிஸோடுகளையாவது பார்க்காதவர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று அடித்துக் கூறலாம். அவ்வளவு பிரபலம் அடைந்தது !

யதார்த்தமான மற்றும் தரையைத் தொடும் (down-to-earth !) கதையமைப்பு மெட்டிஒலிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனாலும், சரோ கதாபாத்திரம் வாயிலாக பெண்ணடிமைத்தனத்தையும், ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் கொடூரத்தையும் இவ்வளவு அதிகபட்சமாக காட்டியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ! தொடரில் வரும் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரம் பிரச்சினை இல்லாமல் இருந்த நாளே கிடையாது எனலாம். ஆனாலும் அவர் வெளிப்படுத்தும் சீர் தூக்கி நோக்கும் குணமும், மன உறுதியும் அலாதியானது. டெல்லி குமார் இவ்வேடத்தில் வாழ்ந்திருந்தார் என்று கூறலாம்.

மெட்டி ஒலி குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே ஆன கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, தொடரில் வரும் பல நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.

மெட்டி ஏற்படுத்திய ஒலியால், ஒன்பது மனிக்கு வேலையிலிருந்து பசியோடு வீடு திரும்பும் கணவன்மார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர் ! தாய்மார்கள் அழும் குழந்தைகளை மெட்டிஒலி தொடங்குவதற்கு முன்பே உணவு கொடுத்து உறங்க வைத்தார்கள் ! கூட்டுக் குடும்பங்களில் வாழும் இளம்தம்பதியினருக்கு கொஞ்சிப் பேச அவகாசம் கிடைத்தது ! ஊர் சுற்றி விட்டு வரும் பிள்ளைகள் மெட்டிஒலி சமயத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் நைசாக வீட்டுக்குள் நுழைய வழி ஏற்பட்டது. நகரின் ஒதுக்குப்புற வீடுகளில் திருடர்கள் தங்கள் கை வண்ணத்தை காட்ட வழி ஏற்பட்டது !

மெட்டிஒலி பார்த்த சில கணவர்கள் தாங்கள் ரவி மற்றும் மாணிக்கம் (கதாபாத்திரங்கள்!) போல் அவ்வளவு மோசமாக இல்லை என்று உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தனர். சிலர் கோபியும் தங்களை போல் ஒரு பெண்டாட்டி தாசன் என்று சிலாகித்தனர். இன்னும் சிலர், போஸ் போல தங்களது மனைவிகளை விட்டு எகிற முடியலையே என்று ஆதங்கப்பட்டனர். சில மாமியார்கள் ராஜம்மாவை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று மருமகள்களிடம் சுட்டிக் காட்டினர். சில பெண்கள் தாங்கள் தனம் போல வாயாடியாகவும், செல்வத்தின் மனைவி போல் ஓடுகாலியாகவும், கோபியின் வீட்டுப் பெண்கள் போல வம்படிப்பவர்களாகவும் இல்லை என்று ஆறுதல் அடைந்தனர்.

மெட்டிஒலியால் சில நேர்மறை விளைவுகளும் உண்டு ! மெட்டிஒலி பார்த்து, செல்வம் போல் ஒரு நல்லதம்பி இல்லையே என்று எண்ணிய அண்ணன்மார்களும், சிதம்பரம் போல் ஒரு பாசமிகு தந்தை இல்லையே என்று நினைத்த மகள்களும், போஸ் போல பாசமான மருமகன் இல்லையே என்றெண்ணிய மாமன்களும், ரவியின் தந்தை போல மாமனார் இல்லையே என்று நினைத்த மருமகள்களும் நிச்சயமாக உண்டு ! கணவனிடம் அல்லல்பட்டு, சொந்தக்காலில் நின்ற லீலாவையும், கணவனால் கைவிடப்பட்டும் வாழ்வை துணிந்து எதிர்கொண்ட நிர்மலாவையும் பார்த்து தன்னம்பிக்கை பெற்ற பெண்களும் இருப்பர்.

இந்த மெகா காவியத்தை ஒருவர் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் (back to back !) பார்ப்பதன் வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையே படைத்து விடலாம் ! ஒரு எபிஸோட் 20 நிமிடங்கள் (விளம்பர இடைவேளை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டால் கூட மெட்டிஒலியை (இடைவெளியே இல்லாமல்) முழுதும் பார்த்து முடிக்க, 16220 நிமிடங்கள் அல்லது 270 மணிநேரம் அல்லது 11 நாட்கள் ஆகும் !!!

முன்பு சன் டிவியில் "சித்தி" தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, பொதுவாக, அது தொடங்கும் நேரம் தான் நான் பணியிலிருந்து வீடு திரும்புவேன். என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே, உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

**************************************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Mookku Sundar said...
//என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! //

வீட்டுக்கு வீடு வாசப்படி...:-)

அசத்தல் போங்கோ. !

10:39 PM, June 20, 2005

லதா said...
//உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" //

சித்தியைக் கூடத் தத்து எடுத்துக்கொள்ள முடியுமா ? :-))

3:15 AM, June 21, 2005

-L-L-D-a-s-u said...
//தரையைத் தொடும் (down-to-earth !) //

ஆஹாஹ்ஹா

4:32 AM, June 21, 2005

பினாத்தல் சுரேஷ் said...
டிவி மெகாத்தொடர் என்பதனாலேயே கிண்டல் அடிக்க பலர் காத்திருக்க, அது ஒன்றும் அப்படித் தீண்டத்தகாத வஸ்து அல்ல எனும் பார்வையோடு எழுதப்பட்ட நல்ல நேர்மையான அலசல் பாலா.

தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை - குறிப்பாக, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற ரவி கதாபாத்திரத்துக்கு மற்றவர்கள் செய்யும் அட்வைஸ், பெண்கள் படித்து வேலைக்குச் செல்வதால் கிடைக்கும்
சுயமரியாதை பற்றிய விவாதங்கள்..

நிச்சயமாக ஒரு நல்ல தொடர்.

9:26 AM, June 21, 2005

அன்பு said...
அருமையா எழுதியிருக்கீங்க பாலா... ஒரு சிலர் மெட்டிஒலியத்திட்டினா கைதட்ட ஆளுவருவாங்கன்னு எழுதிட்டுருக்கும்போது - உங்களுடைய பார்வையில் எழுதியதற்கு நன்றி. இங்கு சிங்கையில் இரவு 10 மணியிலுருந்து 11:30க்கு மாற்றிய பின்னாலும்கூட வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம் - பல நாட்கள் பதிந்துவைத்து...

உண்மையில் யார் எத்தனை குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதற்கும் மேல் மெட்டிஒலி ஒரு அருமையான தொடர். இப்போது வரும் பெரும்பாலான அடிதடி திரைப்படங்களுக்கு அந்த தொடர் எவ்வளவோ மேல்... எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!

மீண்டும் நன்றி.

11:36 AM, June 21, 2005

enRenRum-anbudan.BALA said...
சுந்தர், அன்பு, சுரேஷ்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

லதா, தாஸ், மூக்கர்,
உங்கள் நக்கல்S-ஐ ரசித்தேன் ;-)

அன்பு,
//எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!
//
என் மகளுக்கும் (மூன்றரை வயது!) தான் :)

சுரேஷ்,
//தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும்
என்பதில் ஐயமில்லை
//
நிச்சயமாக, ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

8:39 PM, June 21, 2005

வீ. எம் said...
பாலா,
நல்ல அலசல்.நான் மெட்டி ஒலி பற்றி ஒரு சின்ன அலசல் போட்டேன் போன வாரம் , பார்த்தீர்களா?
தங்களையுடையது அதை விட ஆழமான அலசல்..வாழ்த்துக்கள்!!
//"அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே,//
// உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்//

உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)

வீ எம்

12:39 PM, June 22, 2005

enRenRum-anbudan.BALA said...
வீ.எம்,

அலுவலகத்தில் பரபரப்பான (அழுத்தம் தரும்!) வேலைகளுக்கு நடுவே, உங்கள் பாராட்டு ஓர் உற்சாகத்தை தந்தது. அதற்கு என் நன்றி :)

தங்களது மெட்டிஒலிலிலிலிலிலிலி(!!!) பதிவைப் படித்தேன். நல்ல பதிவு.

//உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)
//
இதைக் கேட்டு எனக்கு வருத்தம்(!) ஏற்பட்டாலும் என் மனவி மகிழ்ச்சி அடைவார் என எண்ணுகிறேன் ;-)

எ.அ. பாலா

3:21 PM, June 22, 2005

Anonymous said...
Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai.

http://thatstamil.indiainfo.com/news/2005/06/22/suicide.html

3:36 PM, June 22, 2005

பினாத்தல் சுரேஷ் said...
Anon Says: //Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai//

While this has to be condemned, what the serial directors or the TV can do to avert this! Much as the paalabishegam cases in Cinema.. Oorukku oru paithiyam irukku -- may be this was her ambition, get a death which is dicussed..

9:39 PM, June 22, 2005

PositiveRAMA said...
பாலா! சூப்பர் விமர்சனம்ங்க!

11:19 AM, June 23, 2005

Anonymous said...
positiverama,
Thanks for the appreciation !
---BALA

11:34 PM, June 23, 2005
***********************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star22b. சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி' *மீள்பதிவு*

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது. நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி' தொடரைப் பார்த்தேன். இதை விட சிறப்பாய் மக்களை முட்டாளாக்க முடியாது என தோன்றுமளவுக்கு, பக்தி உணர்வை காமெடி ஆக்கும் வகையில், பல 'திடுக்' காட்சிகள் கொண்ட சூப்பரான ஒரு தொடர் இது! பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உதயமானவர்கள்(!), இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தான், கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்! வியாபார நோக்கு அவசியம் தான். ஆனால், நம்பத்தகாத வகைக் காட்சிகளை, உலகம் முழுதும் பார்க்கும் டிவியில், வரையறை இல்லாமல் வாராவாரம் ஒளிபரப்பி இலாபம் ஈட்ட வேண்டுமா என்பதே கேள்வி!

இத்தொடரை பார்ப்பதன் விளைவாக என் மகள்கள் பக்தி நிறைந்தவர்களாக ஆகிறார்களோ இல்லையோ, சீக்கிரமே 'Missile Technology' பற்றி சந்தேகங்களை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! நேற்று இத்தொடரில், நீலி என்ற நல்ல ஆவிக்கும், மாயச்சாமி மற்றும் வள்ளி என்ற இரண்டு தீயவர்களுக்கும் (கெட்டவரில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் --- இதிலெல்லாம் நன்றாக சமத்துவம் காட்டுவார்கள்!) இடையே நடக்கும் மந்திர, தந்திர போராட்டத்தை விலாவாரியாக காண்பித்தார்கள். இப்போராட்டமே, ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து ராஜியை (தொடரின் கதாநாயகி) மண்ணெடுக்க விடாமல் (எதற்கு என்று எனக்குத் தெரியாது? வீடு கட்டுவதற்காக இருக்கலாம்! ) தடுப்பதற்காகத் தான்!


வில்லன்கள் இருவரும் அக்னி வளர்த்து, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி, தங்கள் கைகளால் தலையை இடமும் வலமுமாக சுற்றி கோணங்கித்தனம் செய்தவுடன், ஒரு லேசர் வகை ஆயுதம் அக்னியிலிருந்து புறப்பட்டு, வானை நோக்கி சீறிப் பாய்கிறது!!! சாதாரணமாக வாய் ஓயாமல் பேசும் என் இரண்டாவது மகளிடமிருந்து (3 வயது) அடுத்த 20 நிமிடங்கள் பேச்சே இல்லை! அந்த ஏவுகணை கிளம்பிய மறுகணமே அதை உணர்ந்து விடும் நீலி ஆவி (நடிகை கீர்த்தனா!) குழந்தைகள் அலறும் வண்ணம் பயங்கரமாக 'பேய்' முழி முழித்து, தனது உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஓளியினால் கோயிலுக்கு (கோபுரத்தையும் சேர்த்து!) ஒரு Electromagnetic தடுப்பு வலையை உண்டாக்குகிறது. 'கொடியவர்களின் கூடாரத்தில்' உதித்த ஏவுகணை அத்தடுப்பு வலையில் மோதிப் பார்த்து சலித்து திரும்பி எங்கோ போய்விடுகிறது!

தீயவர்கள் இன்னொரு ஆயுதம் நெருப்பிலிருந்து தயாரித்து ஏவுகிறார்கள்! நீலி ஆவி பதில் ஆயுதம் உருவாக்கி அதை பஸ்பம் ஆக்குகிறது. அடுத்து, இருவரது சக்தியையும் ஒருங்கிணைத்து ஒரு கொடிய மிருக வடிவ லேசர் பொம்மையை உருவாக்கி, இம்முறை நீலியையே அழிக்க அனுப்புகிறார்கள்! என் மகள்கள் "அப்பா, நீலி செத்துடுவாளா?" எனக் கேட்டனர், நீலி ஏற்கனவே செத்த ஓர் ஆவி என்பதை உணராமல்! நானும் 'நீலி காலி' என்று தான் நினைத்தேன்! ஆனால் நீண்ட கூந்தல் கொண்ட நீலி ஆவியோ
"உனக்கும் பெப்பே, உன் பாட்டனுக்கும் பெப்பே!" என்ற வகையில், அந்த தாக்குதலையும் முறியடித்து ஒரு இடிச்சிரிப்பு சிரித்தது பாருங்கள், எனக்கே கதி கலங்கி விட்டது!! என் மகள்களோ பயமின்றி ரசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும், பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!

அதற்கடுத்து, நீலி ஆவி நேராக கொடியவர்கள் முன் அகாலமாகத் தோன்றி, தாக்குதலை நிறுத்துமாறு அவர்களை எச்சரிக்க, அதை மதிக்காமல் திமிராகப் பேசும் இருவரையும், 'டொய்ங்' என்ற சத்தத்துடன், காணாமல் போக வைக்கிறது! அடுத்த வாரம் மாயச்சாமியும், வள்ளியும் மறுபடியும் உயிர் பெற்று விடுவார்கள் என்று என் மூத்த மகள் அடித்துக் கூறினாள்! இது போன்று பல சீரியல்கள் அவள் பார்த்ததால் விளைந்த ஞானத்தின் பயன்!!! அதே சமயம் கோயிலில், நான் மேலே குறிப்பிட்ட தொடரின் கதாநாயகி ராஜி, பக்திப் பரவசத்துடன், கண்ணில் நீர் மல்க, கோயிலில் எந்த இடத்தில் மண் எடுத்தால் நல்லது என்றுரைக்குமாறு கருப்புசாமியிடம் கோரிக்கை விடுக்கிறாள். இத்தொடரில் முணுக்கென்றால் கேட்டவரின் முன் பிரத்யட்சம் ஆகும் தெய்வம், இம்முறை (for a change) ராஜி முன் தோன்றாமல், கருப்புசாமியின் அருவாள் பதித்த இடத்தைச் சுற்றி ஒரு லேசர் ஒளி வட்டம் இட்டு, அவ்விடத்திலிருந்து மண் எடுக்குமாறு ஸிம்பாலிக்காக உணர்த்துகிறது!!! ராஜி மண்ணை எடுத்து ஒரு குடத்தில் இட, இதற்கு மேல் சீரியலைப் பார்த்தால் எனக்குள்ள தெய்வ பக்தியும் போய், புத்தியும் பேதலிக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த நான், வீட்டை விட்டு 'எஸ்கேப்' ஆனேன்!!!!!!

இத்தொடரின் காட்சிகளில் தெரியும் தொழில்நுட்பம், அந்தக் காலத்து மகாபாரதத் தொடரில் வருவது போல் இல்லாமல் (ஒரு டிவித்தொடர் லெவலுக்கு) much better எனத் தோன்றியது. ஆனாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள், கற்கால டைனாசர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்த தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்! தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்!
ராஜ ராஜேஸ்வரியே துணை!

'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ராஜி - டகிள்பாஜி

(சுரேஷ் கண்ணன் 'ஏய்' திரைப்படத்தை விமர்சித்து எழுதிய தனது ஒரு பதிவில், "ஏய் - ஒரு ஆய்" என்று முத்தாய்ப்பாக ஒரு வரியுடன் பதிவை முடித்திருந்தார் :))

என்றென்றும் அன்புடன்,
பாலா

***********************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:


Suba said...
இந்த தொடர் மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழக சின்னதிரைத் தொடர்களில் பக்தி மயத்தை உணர்த்தும் வகையில் வெளிவருபவை எல்லாமே இதே மாதிரிதான். பார்ப்பவர்களை முட்டாளாகவும் சமயத்தை மாந்திரீகம் சார்ந்ததாகவும் காட்டுவதிலேயே கவனத்தைக் காட்டுகின்றனர். இது சமயத்தை வளர்ப்பதற்காக வெளிவருபவையாக எனக்குப் படவில்லை. மாறாக சமயத்தையும் தத்துவங்களையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் முயற்சியாகத் தான் எனக்குப் படுகின்றது. ஜெர்மனியிலும் சன், K, ஜெயா ராஜ் டிவிகள் உலவுவதால் அவ்வப்போது இந்தத் தொடர்களைப் பார்த்து நானும் பயப்படுவதுண்டு..!

10:48 PM, January 31, 2005

பினாத்தல் சுரேஷ் said...
Bala,

Sun TV is doing a wonderful job of spreading Periyar's atheist preachings through these serials! Sure -- at least 10% of the audience would have turned "nathigargal" by now.

9:23 AM, February 01, 2005

இளவஞ்சி said...
Technology-ய் உபயோகித்து ஸ்பீல்பர்க் டினாசோர் மட்டுமா காட்டினார்? indiana jones ல் இல்லாத மாயாஜால காட்சிகளா? இப்போகூட vanheil raising என்ற ஆங்கில பேய் படம் வந்ததே... ராஜராஜேஸ்வரியெல்லாம் ஒன்றுமேயில்லை...
அறிவாளிகள் வேண்டியதை தேடிக்கொள்கிறார்கள். நம்மைப்போன்ற கிடைத்ததை அனுபவிக்கும் சராசரிகளுக்கு எல்லா ஊரிலும் ஒரே சரக்குதான்.. பாட்டிலு தான் வெற..

4:23 PM, February 01, 2005

enRenRum-anbudan.BALA said...
இளவஞ்சி,

கருத்துக்களுக்கு நன்றி! ஆனால், சத்தியமாக, ஸ்பீல்பெர்க் காட்டியவைகளையும், சன்டிவியின் மாயாஜாலக் காட்சிகளையும் equate செய்வதை ஒப்புக் கொள்ள இயலாது :-)

எல்லாரும் திரைப்படங்களையே விமர்சனம் செய்கிறார்களே என்று ஒரு மாறுதலுக்காக ஒரு டிவித் தொடரை பற்றி விமர்சனம் செய்ய, என் பாணியில்(!) முயன்றேன்! அவ்வளவே.

என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, February 01, 2005

வசந்தன்(Vasanthan) said...
அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும்இ பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!
டிவியில் பார்ப்பதென்ன சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின்னே எப்படிப் பயப்படுவார்கள். (புரிஞ்சுதா)

11:05 AM, February 15, 2005

Anonymous said...
வசந்தன்,

இது கூடப் புரியாத 'கொய்யான்' இல்லை நான் :-)

இருந்தாலும், இது கொஞ்சம் TOO MUCH இல்ல???

என்றென்றும் அன்புடன்,
பாலா


1:40 PM, February 15, 2005

வசந்தன்(Vasanthan) said...
கோவப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறன்.

6:07 PM, February 15, 2005

காஞ்சி பிலிம்ஸ் said...
பகுத்தறிவு பாசயறையா? அப்படி என்றால் என்ன? கருணாநிதிக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருப்பதாக யார் சொன்னது? பெண்களின் கற்பை போற்றிய திருவள்ளுவரையே தாக்கிய பெரியார் எங்கே? பெண் அடிமைச் சின்னத்தின் முழு உருவமாகிய கண்ணகிக்கு சிலை வைத்து திருக்குறளில் உள்ள கற்பியலுக்கும் சேர்த்து குறளோவியம் படைத்து காசாக்கிய கருணாநிதி எங்கே. சந்தர்ப்ப வாத அரசியல் செய்து மதவாத பா.ஜா.காவுடன் கைகோர்த்த கருணாநிதியை இனி ஒரு முறை பகுத்தறிவாளர் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பகுத்தறிவும் ஹிந்தி எதிர்ப்பும் தமிழ்நாட்டு முன்டங்களுக்கு மட்டுமெ சொல்லி, தனக்கும் தன் குடும்பத்துக்கும் அவைகளை விதிவிலக்காக்கியதை தமிழ்நாடு உணர்ந்து பல நாட்களாகிவிட்டது நன்பரே!

10:03 PM, February 15, 2005

Anonymous said...
Nice satire ...

12:50 AM, August 16, 2006
**********************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Wednesday, December 05, 2007

Star11a. முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி... (மீள்பதிவு)

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!

இரயில் நிலையத்தில்

* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !

இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.

இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா (COPYRIGHT BALA)

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.


******************
இப்பதிவிற்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Shankar said...
LOL! nice work...

10:28 PM, June 30, 2005
பரி (Pari) said...
ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!

உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.

டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
>>>>>
இதுக்கெல்லாம் அந்நியன் வருவான்.

காமெடியா எழுதுனதுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால ரொம்ப சீரியஸான பதிவு போல இருக்கு.

"சின்ன சின்ன" மேட்டர்தானே இதெல்லாம். பண்ணலாம். தப்பில்ல நடத்துங்க.

10:32 PM, June 30, 2005
முகமூடி said...
நல்ல உபயோகமான பதிவு... ஆனால் இது இந்தியா முழுதும் செல்லும் ரயில் என்பதால் ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள்... வட இந்தியாவில் ரிசர்வ் பெர்த்தாக இருந்தாலும் நீங்கள் பாத்ரூம் சென்று திரும்பி வந்தால் ஒரு வயதான பெரிய உருவம் உங்கள் பர்த்தில் படுத்திருக்கும் (சொத்து வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் முன் நெஞ்சு வலி போஸ் கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு போஸில்) கால்மாட்டில் ஒருவர் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவர்களை எந்த்ரிக்க வைக்க படும் அவஸ்தைகள்...

அப்புறம் ஓசியில் வாங்கி படிக்கும்/படுக்கும் பேப்பரை திருப்பி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா?

10:46 PM, June 30, 2005
vishytheking said...
oh my god.. this bala and boston bala are two different guys.. sorry mate.. i did not realise that..

ok now back to the topic.. bala thanks for giving the mugamoodi link on the topic.. i had never seenthat blog..

yours is also a good blog..keep it up.

As pari said, its default in Delhi that if you are taking GT to chennai till mathura (around 12 AM) you cannot sleep as weekly commuters will sit in your seats and play cards.. if you ask your right like anniyan, kaise aadmi ho thum (enna aaluyya nee) nu thittuvaanga.

by the way, since i mixed up your identity, i did not invite you to answer my questions.. please feel free to answer them.
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html

thanks and regards

vishy

please remove the ananymous login option. thanks

11:19 PM, June 30, 2005
Boston Bala said...
>>* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.///

Been there; done that :>
Sema experience pola !

1:32 AM, July 01, 2005
கோபி said...
//சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !//

ரெகுலரா சரக்கடிக்கிற ஒருத்தர் சொன்ன அட்வைஸ் "வாட்டரோட வோட்கா, கோக்ல விஸ்கி, ரெண்டும் கலந்தா ஒன்னுமே வெளிய தெரியாது"

3:03 PM, July 01, 2005
வீ. எம் said...
// இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) //
பாலா ,
இல்லயே , நான் ஊசி எடுத்து இட்லி, சப்பாத்தி ல குத்தி பார்த்தேன் , நல்லா போகுதே.. அப்புறம் எப்படி இதை ஊசிப்போகத அயிட்டம்னு சொன்னீங்க??? ஹி ஹி ஹி

///உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)//
அதே போல தூக்கி மேலே வைக்கும் போது கை தவறி யார் தலையில் விழுந்தால் அவருக்கு பலமாக அடி படாதவரை எடை இருந்தால் நலம்

அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
வீ எம்

8:24 PM, July 04, 2005
மாயவரத்தான்... said...
த்தோடா... நம்ம 'முதல் பஸ் பயணத்துக்கு வழிகாட்டி'(http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_19.html")யை விட இது நல்லாருக்கே!

9:52 PM, July 04, 2005
enRenRum-anbudan.BALA said...
nanRi, VM & mayavarathaan !!!

//அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
//
puriyalaiyE, appu !!!

10:33 AM, July 05, 2005
வீ. எம் said...
சரி, பாலா ஒரு க்ளு தரேன்..

ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்

6:22 PM, July 05, 2005
enRenRum-anbudan.BALA said...
V.M,
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
//

suththamA puriyalE, boss :-(

It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!!

1:58 PM, July 07, 2005
Voice on Wings said...
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்
//

:) sariyAna joLLu party :)

4:18 PM, July 07, 2005
வீ. எம் said...
அங்க பாருங்க voice on wings கண்டுபிடிச்சுட்டார்.. பாம்பின் கால் பாம்பறியும் னு இதை தான் சொல்லுவாங்களா??

// It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!! //
Not leaving, taking a short break. but still it is unfortunate . hope they will come back soon

அப்புறம் பாலா , என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்லையே.. ? என் blog ku leave விட்டுடீங்களா?? :)

வீ எம்

5:02 PM, July 07, 2005
enRenRum-anbudan.BALA said...
இள ரத்தங்கள் எல்லாம் சம்ம ஷார்ப்பா இருக்கீங்க :) நாம தான், கொஞ்சம் வெண்குழலா ஆயிட்டோ ம் :-(
VM, ஒங்க லேட்டஸ்ட் பதிவை இப்ப தான் பார்த்தேன் ! கமெண்ட் போட்டிருக்கிறேன் ! பாருங்க !
என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, July 07, 2005
Suresh said...
Good one. But the people who read this may not really would travel in train considering the advent of low cost airlines!!!!

9:23 AM, July 08, 2005


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Tuesday, July 03, 2007

350. கண்டேன் 'சிவாஜி'யை!

ஒரு வழியாக சனிக்கிழமை (30/6/07) சிவாஜி திரைப்படத்தை சத்யம் தியேட்டரில் காண வாய்ப்பு கிடைத்தது. சக தலைவர் ரசிகர்களான ஐகாரஸ் பிரகாஷ¤ம், ரஜினி ராம்கியும் விரிவாக விமர்சனம் எதுவும் எழுதியதாகத் தெரிவில்லை :) ஐகாரஸ் ஓரிண்டு வாக்கியங்களில் ஒரு விமர்சனம் எழுதி, முத்தாய்ப்பாக ஒரு அற்புதமான ஷாட் அடித்திருந்தார்!

Rajnikanth is a phenomenon which cannot be understood by those who didnt watch his movies when they grew up. எவ்வளவு யதார்த்தமான உண்மை!


இணையத்தில், தனிமனித காழ்ப்பு மிக்க விமர்சனங்கள் இறைந்திருந்தன. அது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னவோ, பாமர ஜனங்களை அவர் அடித்துப் பிடுங்குவது போல் ஒரு தோற்றத்தை அவை ஏற்படுத்தின. உண்மையை சொல்லப்போனால், பலதரப்பட்ட மக்களையும் காந்தம் ஓர் கவர்ந்து தன் ரசிகர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற ஆளுமை. ஒரு 3 மணி நேரம் நம் கவலைகளை மறக்கடிக்க வல்ல ஒரு சூப்பர் Entertainer ரஜினி !

எனக்கு சட்டென்று மனதில் பட்டது, படம் ரொம்ப நீளம், இரண்டாவது பாகம் இழுவை தான்! 'ரஜினி படம்' என்பதால் மட்டுமே உட்கார முடிந்தது என்பது நிஜம். முதல் பாதி ரஜினி, விவேக் அடிக்கும் லூட்டிகளால் ஜாலியாகப் போனாலும், திரைக்கதையில் தொடர்பு அறுந்து காட்சிகள் சொருகப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றம்! ஸ்டைல், சண்டை, மிகை/மிகையில்லாத நடிப்பு, காமெடி என்று ரஜினி அனைத்திலும் பின்னிப் பெடலெடுத்து விட்டார்! ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! சங்கர் எப்போதும் போல பிரும்மாண்டம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் துணையை நாடியிருந்தாலும், ரஜினி ·பார்முலாவை புரிந்து கொண்டு படமெடுத்திருக்கிறார்.

ரஜினி படத்திற்கு பெரிய அளவில் கதை தேவைப்படுவதில்லை! அவர் ஆளுமையை சரியாக பயன்படுத்த வேண்டும், அதை சங்கர் உருப்படியாகவே செய்திருக்கிறார் என்பது என் கருத்து. சகலத்தையும் இழந்து, மீண்டும் பெரிய ஆளாக ரஜினி உருவெடுப்பதை படையப்பா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதனுடன், சங்கரின் "பவர்·புல்" சோஷியல் மெசேஜை (கறுப்புப்பண ஒழிப்பு) கலந்தால், சிவாஜி கதை:) இந்தக் கதை வெளியில் தெரியாமலிருக்கவா, சங்கர் இத்தனை பிரயத்தனப்பட்டார் என்று தோன்றியது நிஜம்! அன்னியன், இந்தியன் அளவு கூட கதை இல்லை, நல்ல வேளை, ரஜினி படத்தை காப்பாற்றி விட்டார்!

படம் முழுக்க ரஜினியுடன் வரும் விவேக், தன் பாணி அறிவுரை எதுவும் வழங்காமல் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அந்த "ஸிக்ஸ்க்கு அப்புறம் செவன்டா, சிவாஜிக்கு அப்புறம் எவன்டா" பஞ்ச் சூப்பர். சூப்பர்ஸ்டார் கனவுகளோடு அலையும் விடலைகளுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தால் சரி தான் ;-)

ஷ்ரேயா introduce ஆகும் காட்சியிலேயே ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன், ஷ்ரேயாவுக்காக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று, ஏனெனில், முதல் தடவை பார்ப்பது ரஜினிக்காக மட்டுமே அல்லவா ? அம்மணியின் கண்களைப் பார்த்தால் நடிப்பு வரும் போல் தான் தோன்றுகிறது. ஆனால், எந்த இயக்குனர் அவரை நடிக்க விடுவார் என்ற சந்தேகமும் வருகிறது! கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் தன் முன்/பின் அதிர்வுகளால், நம் மனதில் பல அதிர்வுகளை ஏற்'படுத்துகிறார்'! அதுவும், தன் சிவப்புத் தாவணியை வீசி ஷ்ரேயா ரயிலை நிறுத்தும் காட்சியில் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்தது!

சுஜாதா வசனங்கள் நறுக்! உதாரணம் 'சாகற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா, வாழற நாள் நரகமாயிடும்' வசனம் ! இவ்வளவு புதுமுகங்கள் (ராஜா, உமா பத்மநாபன், சாலமன் பாப்பையா ...) நடிச்ச படத்தில், சுஜாதாவுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கலாம் :) வில்லன் சுமன் சுமார் தான், ரகுவரனையே போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

படத்தில் மிகவும் அபத்தமாகப் பட்ட 2 விஷயங்களைச் சொல்கிறேன். கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று, ஊழல்வாதிகளுக்கு நெருங்கிய ஆட்களை ஒரு இடத்தில் கூட்டி, அவர்களை அடித்து உதைத்து உண்மையை வரவழைப்பதும் (சுஜாதா இருந்தும் இப்படியா ?), இவ்வளவு கண்ணுக்கு ரம்மியமான படத்தில், ஷ்ரேயாவுக்கு அப்பாவாக வரும் ராஜா, ஓரிரு காட்சிகளில் மிக அழுக்கான, வியர்வை சொட்டும் பனியனுடன் தோன்றுவதும் உறுத்தலாக இருந்தது.

திரைப்படத்தில், பலரது (ஒளிப்பதிவாளர் ஆனந்த், ரஹ்மான், பீட்டர் ஹெயின், தோட்டா தரணி, நடன இயக்குனர்கள்) உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. அதற்காக, இவ்வளவு (80 கோடி) செலவழித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதில் பாதி செலவழித்து இருந்தால் கூட, சிவாஜி மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று திடமாகக் கூற முடியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 350 ***

Monday, April 30, 2007

340. லாராவைத் தொடர்ந்து சச்சினும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

சற்று முன் ஒரு செய்தி:
-------------------------------

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், பல சாதனைகள் புரிந்தவருமான பிரையன் சார்லஸ் லாரா, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்றதின் தொடர்ச்சியாக, நமது ஸ்டார் ஆட்டக்காரரும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து கிட்டத்தட்ட 75 சதங்கள் அடித்து சாதனை படைத்தவரும் ஆன சச்சின் ரமேஷ் தெண்டுல்கர், உலகக் கோப்பையின் முதல் ரவுண்டிலேயே இந்தியா அவமானகரமாக வெளியேறிய காரணத்தை முன்னிட்டு, தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக எந்த ஒரு அறிவிப்பையும் இது வரை வெளியிடாத காரணத்தாலும் , எனது பிளாக் கவுண்டர் சரியாக ஓடுகிறதா என்பதை செக் செய்ய இதை விட பெட்டராக எதுவும் எனக்குத் தோன்றாததாலும், வலையுலக சச்சின் போல எனக்கும் பின்னூட்ட ஆசை திடீரென்று முளைத்ததாலும், ஏப்ரல் முதல் தேதி நான் பிஸியாக இருந்த காரணத்தாலும், இப்பதிவை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்!!!
(மேலே உள்ள வாக்கியத்தின் நீளத்தை கணக்கில் கொண்டு, அதை கின்னஸ் ரெக்கார்டுக்கு யாராவது பரிந்துரைத்தால் தன்யனாவேன்!)

நண்பர்கள் மன்னிக்கவும் :)
I am the GREAT ESCAPE ;-)

கொஞ்ச நாளா, நிறைய சீரியஸ் பதிவுகள் எழுதித் தள்ளிட்டேன், அதான் ஒரு மாறுதலுக்கு! வ.வா.ச மெம்பர்கள் மட்டும் தான் 'உப்புமா' பதிவுகள் போட வேண்டுமா என்ன ????

இப்பதிவுக்கு நீங்கள் தரவல்ல சாம்பிள் பின்னூட்டங்கள் (ஏதாவது ஒன்றை கட் அண்ட் பேஸ்ட் செய்தாலே போதும், அல்லது நீங்கள் நினைக்கும் பின்னூட்ட நம்பரை, பின்னூட்டத்தில் இட்டாலே போதும் :))

1. யோவ் ...
2. இதெல்லாம் ரொம்பவே டூ மச்!
3. குசும்புய்யா ஒமக்கு!
4. லூஸாப்பா நீர் ?
5. :)))))))))))))))
6. நான் ஏமாறவில்லை !
7. சூப்பர், தல !
8. பலே, பேஷ், ரொம்ப நல்லாருக்கு !
9. ஏன்யா இப்டி அழிச்சாட்டியம் பண்றீர் ?
10. ஒம்ம தலையிலே இடி விழ :)
11. நக்கல் பிடிச்ச பாலா ஒழிக!
12. நகைச்சுவை மன்னர் பாலா வாழ்க!


தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா

*** 340 ***

Friday, April 13, 2007

331. விசித்திர திகில் அனுபவங்கள் (அ) சம்பவங்கள் - தொடர் சங்கிலி

தேசிகனின் இந்தப் பதிவை வாசித்தவுடன், என் ஞாபகத்தில் பளீரிட்ட 1/3 டஜன் அனுபவங்களை (என்னுடையது அல்ல!) பகிர்ந்து கொள்கிறேன்.

1. அபிராமி, அபிராமி!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்), அபிராமி தியேட்டரில் (என்று நினைக்கிறேன்) லிசா என்ற மலையாளப் பேய்ப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் திகில் சம்பவம் (புரளியா என்று தெரியாது!) நன்றாக இன்னும் நினைவில் உள்ளது. அதைக் கூறி, இரவு வேளைகளில் பலரை பயமுறுத்தி இருக்கிறேன்.

அந்தப் படத்தை நைட்ஷோ பார்க்க சென்றிருந்த இரண்டு இளம் சகோதரர்களில் ஒருவருக்கு படம் ஓடிக் கொண்டிருந்தபோது அவசரமாக "அது" (படக்காட்சிகள் ஏற்படுத்திய கிலியில்) வர, டாய்லெட்டுக்கு ஓடினார். டாய்லெட்டில் யாரும் இல்லை. இயற்கை உபாதையை சரி செய்து கொண்டு, கை அலம்பும்போது, மேலேயிருந்து தலையில் ஏதோ சொட்டவே, மேலே பார்த்தவர், சப்தநாடியும் ஒடுங்கிப் போய் விட்டார். உத்திரத்தில் ஒரு பிளவிலிருந்து ஒரு மனிதக் கை, ரத்தம் சொட்ட, தொங்கிக் கொண்டிருந்தது.

பீதியான அவர், இருக்கைக்கு வந்து, தன் சகோதரரிடம் மேட்டரை ரகசியமாகக் கூறி, தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறினார். "வா, அது என்னவென்று பார்த்து விட்டு, தியேட்டர் மேனேஜரிடம் கம்பிளெயிண்ட் பண்ணலாம்" என்று அடுத்தவர் கூறியதற்கு, "கை"யைப் பார்த்தவர், "அதெல்லாம் வேண்டாம், நம்மைக் குடைந்து விடுவார்கள், சீக்கிரம் போகலாம்" என்று அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பார்த்து, தியேட்டர் வாட்ச்மேன், " என்ன, தம்பிகளா, படம் பார்க்க பயமா இருக்கா, இந்த மாதிரி படத்துக்கெல்லாம் சின்னப்பசங்க நைட்ஷோ வரலாமா?" என்று விவரம் புரியாமல் கடுப்படித்தார்.

சாலை இருட்டாக இருந்தது. சாலை ஓரத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அதன் ஓட்டுனர் முக்காடு போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி, "நாங்க எக்மோர் போகணும் வரீங்களா?" என்றவுடன் அவர் குளிருக்கு முண்டாசு கட்டிக் கொண்டு, போட்டிருந்த ஜிப்பாவை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு, "போகலாங்க, ஒரு 10 ரூபாய் கொடுத்துடுங்க" என்றார்.

கொஞ்ச தூரம் ரிக்ஷா போனவுடன், ரிக்ஷாக்காரர் கரகரப்பான குரலில், "என்ன தம்பிகளா ? பாதிப் படத்துலேயே வந்துட்டீங்க போல தெரியுது, ஏதாவது சீன் பார்த்து பயந்துட்டீங்களா?" என்று கேட்கவே, இளவயசுக்காரர், தான் டாய்லெட்டில் பார்த்ததை விலாவாரியாகக் கூறியவுடன், திரும்பிய ரிக்ஷாக்காரர், "இந்தக் கையா, பாருங்க?" என்று ஜிப்பாவிலிருந்து தன் இடது கையை உருவிக் காட்டினார், ரத்தம் தோய்ந்த டாய்லெட்டில் பார்த்த அந்தக் கை போலவே! ரிக்ஷாக்காரருக்கு, முகம் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு கருப்பு வட்டம் மட்டுமே இருந்தது!!!!

குலை நடுங்கிப் போன சகோதரர்களில் ஒருவர், ஸ்பாட்டிலேயே அவுட்! இந்த சம்பவம் உண்மையிலே நடந்ததா என்றெல்லாம் நான் இதுவரை செக் பண்ணவில்லை!

2. லாலி ரோட் to GCT

கல்லூரியில் படித்த காலத்தில், இரண்டு அம்மாஞ்சிகள் (சந்திரசேகர், பத்து என்ற பத்மநாபன்) என் கூடப் படித்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவம் இது. செவ்வாய் கிழமைகளில் ஹாஸ்டல் மெஸ்ஸில் ghee rice என்ற வாசனை (நாற்றம்!) மிக்க உணவு ஒன்றை டின்னருக்கு வழங்குவார்கள். சந்திராவுக்கும், பத்துவுக்கும் அது ஆகவே ஆகாது. அன்று, இருவரும், ரத்ன விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ள அன்னபூர்ணா சென்று ஒரு வெட்டு வெட்டி விட்டு (Dutch முறை தான்!) காலாற ஆர்.எஸ்.புரத்திலிருந்து நடந்து வருவார்கள்.

லாலி ரோடு ஜங்ஷன் என்ற நாற்சாலை சந்திப்பிலிருந்து (ஒரு பக்கம் போனால் GCT, இன்னொரு பக்கம் போனால் மருதமலை) GCT கல்லூரி வரை செல்லும் சாலையில், தெரு விளக்குகள் இல்லாததால், மரங்கள் அடர்ந்து இரவு வேளைகளில் இருட்டாக இருக்கும். ஒரு சமயம், இரவு மணி பத்து இருக்கும். அன்னபூர்ணாவில் டின்னர் முடித்து விட்டு, பயத்தைப் போக்க கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே, இருவரும் 'லாலி ரோடு to GCT' நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் ஏதோ ஆளரவம் கேட்டது. அமாவாசையால் கும்மிருட்டு வேறு. பத்து, "யாரது?" என்று வினவ, ஒரு கிழவியின் குரல், "தம்பிகளா, நான் ஸ்ரீவள்ளி டாக்கீஸ் கிட்ட போகணும், கொஞ்சம் வழி சொல்லுவீங்களா?" என்றவுடன், பயம் தெளிந்த பத்து, "பாட்டி, இப்டியே நேரா, காலேஜ தாண்டிப் போனா, ஒரு டீக்கடை வரும். அங்க கேட்டா சொல்லுவாங்க" என்று கூறி விட்டு இருவரும் நடக்க மீண்டும் ஆரம்பித்தார்கள்.

பின்னாடியே கிழவியும் நடந்து வந்து கொண்டிருந்தாள்! சந்திராவுக்கு ஏதோ பொறி தட்ட(!), மிக வேகமாக நடக்கத் தொடங்கினான், பத்துவும் தான்! பின்னால் கிழவியும் மிக வேகமாக நடந்து வரும் அரவம் கேட்டபடி இருந்தது. இருவரும் பீதியடைந்து, முதலில் மெதுவாக பின்னர் வேகமாக ஓட ஆரம்பிக்க, பின்னால், கிழவியும் ஓடி வரும் அரவம் தொடர்ந்தது!!! தலை தெறிக்க ஓடிய இருவரும், கல்லூரி கேட் அருகில் இருந்த வெளிச்ச பிரவாகத்திற்கு வந்து, திரும்பிப் பார்க்க, பின்னால் யாரும் இல்லை!

இருவருக்கும் அடுத்த 2 நாட்கள் கடுமையான காய்ச்சல், கிளாஸ¤க்கு வரவில்லை. இந்த திகில் கதையை, பார்க்க வந்த எல்லாரிடமும் மாய்ந்து மாய்ந்து சொல்லி, நல்ல பிரபலம் அடைந்தனர் :)

3. தள்ளாதே! என்னைத் தள்ளாதே!

கல்லூரி நண்பன் ஷியாம் சுந்தர், கல்லூரி கிரிக்கெட் டீமின் கேப்டன், தைரியமானவனும் கூட! நாங்கள் தங்கி இருந்த விடுதியின் தரைத்தளத்தில் இருந்த இடது பக்க டாய்லெட் அறை ஒன்றில் பல வருடங்களுக்கு முன் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக ஒரு விஷயம் கேள்விப்பட்டதால், இரவு நேரத்தில், யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். விளக்கு வேறு கிடையாது.

ஷியாமின் அறை தரைத்தளத்தில் தான் இருந்தது. ஒரு நாள் காலை இரண்டு மணி வரை, engineering drawing போட்டு விட்டு, படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்க (தூக்கக் கலக்கத்தில் மறந்து போய்) 'அந்த' டாய்லெட்டுக்கு செல்ல முற்பட்டான். உள்ளே நுழைந்தவனை யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்தது. 'யாரோ வேண்டுமென்றே தள்ளி விடுகிறார்கள்' என்று எண்ணிய ஷியாம், "ஏய், தூக்கம் வருது, வெளயாடாதே" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் உள்ளே நிழைய எத்தனித்தான், மீண்டும் ஒரு தள்ளு! கடுப்பான ஷியாம், "செருப்படி வாங்கப் போற" என்று கத்தியபடி, வேகமாக டாய்லெட்டில் நிழைய முற்பட, 'யாரோ' இன்னும் வேகமாக ஷியாமை தள்ளி விட, ஷியாம் டாய்லெட்டுக்கு வெளியே வந்து விழுந்தான்!!!

இப்போது ஷியாமின் சகலமும் விழித்துக் கொள்ள, தனது அறைக்கு ஓடிய ஷியாம், ஒரு 2 நாட்கள் எந்த டாய்லெட்டுக்கும் போகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) மாவீரன் ஷியாமையே கதி கலங்க வைத்த "அது" குறித்த பேச்சு, கேம்பஸில் ரொம்ப நாட்கள் ஓடியது!!!

4. சொற்களில் சிக்காத பற்கள்!

என் கல்லூரி நண்பன் நாராயணன் (இவனது கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது, படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி என்று அனைத்திலும் கலக்குவான்!) தன் பங்குக்கு ஒரு "திகில்" கதை கூறினான். ஒரு சமயம், அவனது நண்பர்கள் இருவர், கோயமுத்தூரில் உள்ள பழைய ஸ்ரீநிவாஸா டாக்கீஸில், நைட் ஷோ பார்த்து விட்டு திரும்பிய போது, இருட்டான சாலையோரத்தில் (இரவு 2 மணிக்கு) ஒருவர் வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்! நண்பன் ஒருவனுக்கு கடலை கொறிக்க ஆசை வரவே, வண்டி அருகில் சென்று, "ஒரு ரூபாய்க்கு கடலை கொடுங்க" என்று வாஞ்சையோடு வாணலியைப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விட்டது! வாணலியில் மணலோடு வறுக்கப்பட்டுக் கொண்டிருந்தவை மனிதப் பற்கள்!! அப்புறமும் நம் மக்கள் அங்கு நிற்பார்களா, எடுத்தார்கள் ஓட்டம், பின்னங்கால் பிடறியில் பட :)

Epilogue:

------------
நானும் என் பங்குக்கு "திகில்" அனுபவம் பெற, தைரியசாலி வேடமிட்டுக் கொண்டு, தன்னந்தனியாக வாடகை சைக்கிள் மிதித்துக் கொண்டு, கல்லூரிக்கு அருகே இருந்த முத்து டாக்கீஸ¤க்கும், சென்ட்ரல் தியேட்டருக்கும், பல முறை நைட் ஷோக்கள் சென்று வந்துள்ளேன்! படம் பார்த்து விட்டு, அகாலமான நேரத்தில் திரும்பி வரும்போது, சாலையோர முருங்கை மரங்களில் வேதாளமோ, புளிய மரங்களில் பேயோ/பிசாசோ தொங்குவதை ஒரு முறையேனும் பார்த்து விட்டால், நம் ஜென்மமும் 'திகில்' சாபல்யம் அடையுமே என்று ஏங்கி பரிதவித்தது தான் மிச்சம்!!! நைட் ஷோக்கள் போனதில், தூக்கமும் போச்சு, அந்த செமஸ்டரில் மார்க்கும் போச்சு :) நமக்கெல்லாம் எதுக்கும் கொடுப்பினை கிடையாதுங்க :))))


தங்கள் (அல்லது) தாங்கள் கேள்விப்பட்ட "திகில் அனுபவங்களை" பகிர்ந்து கொள்ள நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்:

1. தேசிகன்
2. பினாத்தல் சுரேஷ்
3. டோண்டு ராகவன்
4. ஹாய் கோபி
5. நாமக்கல் சிபி
6. உஷா ராமச்சந்திரன்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 331 ***

Tuesday, April 03, 2007

322. அனானிக்கு வந்த சந்தேகம் (அ) நான் கி.அ.அ.அனானியா ?

என் முந்தைய பதிவில் ஒரு 'அனானி', ஒரு சந்தேகத்தை, கீழே உள்ள பின்னூட்டம் வாயிலாக வெளியிட்டார். நண்பர் குழலிக்கும் இந்த டவுட் இருப்பதை அவரது பின்னூட்டத்தில் உள்ள ஸ்மைலி உணர்த்தியது :) அதனால் தான் இந்த விளக்கப் பதிவு!
***************************
பாலா,

வேண்டாம் விடுங்க.. உங்களுக்கு இந்த விளையாட்டு சரியா வெளையாட வரலை!

இப்படித்தான் ஒருத்தரு பயங்கர வெவரமா வெளையாடறேன்னுட்டு மனோகர் ஜோஷியாகி பல்லிளித்த
கதையை யாரும் மறக்கலை..

எந்த கருத்தா இருந்தா என்ன? உங்க பேருலயே எழுதுங்களேன்.

சரியான வாதம்/கருத்து வைச்சா நீர்வந்து செயல்ல காட்டி போர்டை கழட்டுவீரா?! அதாவது அந்த
போர்டு ஏன் அங்க இருக்குன்னு உமக்கு தெரியாது. மத்தவங்க கும்மியடிக்காம தெளிவா ஆக்கப்ப்பூர்வமா
எடுத்துச்சொன்னா உடனே நீங்க அந்த உலக உண்மைய புரிஞ்சுண்டு காரியத்துல இறங்கீரூவீர்! ஒரே
தமாசையா உம்மோட... "அவங்களுக்குத்தான் அறிவில்லை. கும்மி அடிக்கறாங்க. நீர் என்னத்த
கழட்டப்போறேன்னு சொல்லலையேன்னு" கேட்டா... மொதல்ல அவனை கக்கா போகச்சொல்லு. அப்பறம் நான் வந்து கழுவறேங்கறீர்! தெளிவா எழுதறதா நெனைச்சுண்டா மட்டும் போறாது. அதைப் வாசிச்சுட்டு மத்தவா கேள்வி கேட்டா பதில் சொல்ல வக்கிருக்கனும்.

// ""ஒண்ணு விட்டா"" நீ அத்திம்பேர் பையனா ?விட்டுட்டா போச்சு :)
//
ஆத்துல சொல்லிக் கொடுக்கலையா? இப்படியெல்லாம் கண்ட இடத்துல விடப்படாது ஓய்! பார்த்து... :)

********************************

கி.அ.அ.அ வின் "ஒண்ணு விட்டா" அத்திம்பேர் பையன் தம்பி,

நீங்க ஒங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அனானியா வந்து பிரில்லியண்ட்டா கேள்வி கேட்டிருந்தாலும், எனக்கு இந்த "விளையாட்டு" வரலைன்னு அங்கலாய்த்திருந்தாலும், உங்களுக்கு பதில் சொல்லத் தான் போறேன் :) இனிமேல், கொஞ்சம் 'சின்ன' புனைபெயரில் வந்தால் கூப்பிட வசதியாக இருக்கும் ;-)

தெளிவாச் சொல்றேன், இந்த பதிவை எழுதினது கி.அ.அ.அ. "நான் அவரில்லை". மேலும், 3 வருஷமா இங்க குப்பை கொட்டிக் கொண்டு இருக்கும் எனக்கு, வேறு ஒருவரின் பெயரில் எழுத வேண்டிய அவசியமில்லை! அப்படி செய்ய வேண்டுமென்று விரும்பினால், பார் டெண்டர், இரவுக் கழுகார், வி.சி போல ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு, உஷாரா செய்ற அளவுக்கு எனக்கு(ம்) புத்தி இருக்கு :)

என் பெயரிலேயே நெறைய விவாதங்களில் கலந்து கொண்டு, தீவிரமா கருத்துக்களை முன் வைத்து, சண்டையெல்லாம் போட்டவன் தான் நான்! கேட்டுப் பாருங்க ! எதுக்குக் கேட்கணும், ஒங்களுக்கே தெரியுமே :) மேலும், பாலபாரதி, லக்கிலுக் மற்றும் திருவிடம் ஒரு விஷயத்தை நேரடியாக எடுத்துச் சொல்ல எனக்கு என்ன பயம் வேண்டிக் கிடக்கு, இன்னொருத்தர் பேர்ல சொல்ற அளவுக்கு !!!! லாஜிக் உதைக்குதே, தம்பி :)

உங்க (மற்றும் இன்ன பிறரின்!) தெளிவுக்காகச் சொல்றேன், கி.அ.அ.அ அனுப்பற மேட்டர்ல சற்று காட்டமா இருக்குற சிலவற்றை எடிட் செய்து விட்டுத் தான் பதிப்பிக்கிறேன். என் வலைப்பதிவில் இடப்படுபவை should follow certain guidelines, I have set !

மேலும், கி.அ.அ.அ போல எனக்கு எழுத வராது !!!!! அவர் எழுத்துக்களை சுவீகரித்துக் கொள்ளும் அல்ப ஆசையும் எனக்கில்லை. அதன் மூலம், பிரபலம் அடைய வேண்டிய அவசியமுமில்லை. In fact, கி.அ.அ.அனானியிடம், ஒரு வலைப்பதிவு தொடங்குமாறு ஆரம்பத்திலேயே ஒரு மெயிலில் கூறியிருந்தேன். அவர் அதற்கு பதில் கூறவில்லை.

இன்னொரு விஷயம். எனது முந்தைய பதிவுக்கு (ஒரே நாளில்) 500 ஹிட்ஸ், கி.அ.அ.அ வின் தயவில் ! நான் எழுதும் பதிவுக்கு நார்மலா, 150-200 ஹிட்ஸ் தான் கிடைத்து வருகிறது. அதனால், அவரைப் போல் என்னால் எழுத முடியுமானால், எனக்கு மகிழ்ச்சியே :) Unfortunately, கி.அ.அ.அனானி, மாதத்திற்கு 1 அல்லது 2 மேட்டர் தான் மெயிலில் அனுப்புகிறார் !

கி.அ.அ.அனானியின் எழுத்து நடைக்கு பலரைப் போல் நானும் ரசிகன் ! நான் கூறியவற்றை நம்பறதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். இது தான் என் முதல் மற்றும் கடைசி விளக்கம், ஐயம் கொண்ட ஐயாக்களுக்கு ;-)
*****************************
இப்போது "ஒண்ணு விட்டா" அத்திம்பேர் பையன் தம்பி கேட்ட கேள்விக்கு, அதாவது
//
அண்ணே பாலா,

ஜல்லி கும்மி அடிக்கற ஆளுங்களை விடுங்க.

அந்த போர்டு அங்கே இருக்கது உங்களுக்கு ஓகே வா இல்லையா?

OK ன்னா இதோட நிறுத்திக்கறேன். இல்லைன்னா அதை கழட்டறதுக்கான உங்க முயற்சி கருத்து என்ன?
அதைப்பத்தி ஒரு வரியும் காணோம்!

//

என்னோட பதில் ! முந்தைய பதிவிலேயே, அங்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ அவர்களே பதில் சொல்வாருன்னு போட்டிருந்தேன்! நம்ம "அத்திம்பேர் பையன் தம்பி" என்னிடம் கேட்ட கேள்விக்கு, கி.அ.அ.அ சிறப்பாகவே, ஆக்கபூர்வமாகவே பதில் சொல்லியிருக்காரு. ஆனாப் பாருங்க, தம்பி நீங்க உடனே என் மேல் பாயறீங்க, "எனக்கு இந்த விளையாட்டு வரலை" அப்டின்னு!

அப்புறம், அந்த போர்ட் இருக்கறது எனக்கு ஓகேவான்னு ஒரு கேள்வி கேட்கறீங்க ! பதிவிலே தந்த 'எனது' டிஸ்கிலே, அது அகற்றப்பட வேண்டியது என்று தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கேன். அதற்கு "நாம்" முயற்சி எடுக்கணும் என்றும் கூறியிருக்கேன் !

அந்த போர்டை வச்சு ஜல்லியடிச்சவங்க கிட்ட, கி.அ.அ.அ. 2 கேள்விகள் கேட்டிருந்தாரு. அவங்க முதலில் பதில் தரட்டும். அவங்க முதலில் முயற்சி எடுக்கட்டும், அவங்களுக்கு உதவி செய்ய நிச்சயம் நானும் வருகிறேன். நான் விசாரித்ததில், ராமேஸ்வரத்துல உள்ள DC (Deputy collector) கிட்ட ஒரு புகார் கடிதம் முதலில் அளிக்க வேண்டும் என்று தெரிய வந்தது.

நியாயமா, "கி.அ.அ.அ வின் அத்திம்பேர் பையன் தம்பி" யான நீங்க போர்ட் படமெடுத்துப் போட்ட மற்றும் அது பற்றி "ஆய்ந்து" எழுதிய பதிவர்களிடம், "இந்த போர்டை எடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள் ? அது அங்கிருப்பது சம்மதமா?" என்று முதற்கண் கேள்வி கேட்டிருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம் !!!!!!

ரொம்ப போரடிச்சுட்டேனா ? Bye for now!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 322 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails